ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகள் - தமிழகம் பெற்றதும் இழந்ததும்

"ஜெயலலிதா இல்லாத இரண்டு ஆண்டுகளில் தமிழகம் பெற்றவை என்ன? இழந்தவை என்ன?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

யுவன் பிரபு எனும் ஃபேஸ்புக் நேயர், "பெற்றது கருத்து சுதந்திரம். இழந்தது சுயமரியாதை" என்று கூறியுள்ளார்.

"ஒரு திறமையான தலைமை தனக்கு அடுத்து திறமையான ஒருவரை உருவாக்க வேண்டும். ஆனால் இவர் முட்டாள்களை மற்றும் அடிமைகளைதான் உருவாக்கி இருக்கிறார்," என ஷ்ரவன் முத்து என்பவர் கருத்து கூறியுள்ளார்.

"உண்மையில் இரண்டு தலைமையும் காலமானதால் தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி என்ன என்பதும். 50 வருடங்கள் திரைக்குள் அடைபட்ட மக்களின் எண்ணங்கள் முழுமையாக சிந்திக்க தொடங்கிய ஒன்று போதும் எதைப் பெற்றோம் என்பதற்கு," என்கிறார் செல்வராசு எனும் நேயர்.

"ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வேண்டாம் என்று கூறிய திட்டங்கள் எல்லாம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளன. குறிப்பாக நீட் எனும் கொடிய அரக்கனிடம் சிக்கி மாணவர்கள் மற்றும் மாணவிகள் சின்னாபின்னமாகி வருகின்றனர்," என காமராஜ் ஆறுமுகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

"எதுவுமே பெறவில்லை. உரிமைகளை இழந்ததுதான் மிச்சம்," என விஜி புகழ் எனும் ட்விட்டர் பதிவர் கூறுகிறார்.

"இரண்டு வருடத்தில் ஜெயலலிதா ஏன் தன் அமைச்சர்களை அடிமையாக வைத்திருந்தார் என்று மக்கள் உணர்ந்ததை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை," என்கிறார் கருப்பு நாசர் எனும் பெயரில் ட்விட்டரில் பதிவிடும் நேயர்.

"இருபெரும் அரசியல் தலைவர்களின் மறைவிற்குப் பிறகு, தமிழகம் தனது சுய உரிமைகளை இழந்து, நடுவணரசின் கைப்பாவையாய் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. மக்கள் தலைவர்களை இழந்த மக்களிடையே அரசியல் எழுற்சி, அதிகப்படியான அரசியல் விவாதங்கள், உரிமை போராட்டங்கள் எனப் பெருகிவரும் அரசியல் புத்துணர்ச்சியால் அரசியல் கட்சிகள் சற்று ஆட்டம் கண்டுள்ளது. இவ்விரு ஆண்டுகளில் இருக்கும் அரசியல் கட்சிகளில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்தும், புற்றீசல்களாய் பலப் புதிய கட்சிகள் படையெடுத்துள்ளது," என்கிறார் சக்தி சரவணன் எனும் பிபிசி தமிழ் நேயர்.

சுரேஷ் இவ்வாறு கூறுகிறார், "இழந்தது ஆளுமையை, எதிர்கொள்வது பிரச்சனைகளை."

"இழந்தவை - நடுவண் அரசின் நிதிஇழப்பு, கல்வி உரிமை, காவிரி உரிமை, தமிழ்நாட்டின் மானம் மரியாதை. பெற்றவை - நாட்டில் மலிந்த ஊழல், லஞ்சம், சீர்கேடு - அரசின் இயலாமை ; இல்லாமை, வறுமை," எனப் பட்டியலிடுகிறார் ரெங்கசாமி குமாரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: