You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏ.டி.எம் முன் நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் மீண்டும் வருமா?
- எழுதியவர், ஃபைசல் மொஹமத் அலி
- பதவி, பிபிசி
இந்தியாவில் உள்ள 50 சதவீதத்திற்கும் மேலான தானியாங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்படலாம் என ATM தொழில் கூட்டமைப்பு (CATMi) தெரிவித்துள்ளது.
கிடைக்கப்பெறும் தரவுகள்படி, தற்போது இந்தியாவில் 2,38,000 ஏடிஎம்-கள் செயல்பாட்டில் உள்ளன.
தற்போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதால், பணமதிப்பு நீக்கத்தின்போது எவ்வாறு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-கள் முன்பு நின்றோமோ அதே போன்ற நிலை வரலாம்.
அரசாங்கத்தின் புதிய விதிகளின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கான மானியம் நேரடியாக வங்கிக்கு செல்கின்றன. இதனால், ஏ.டி.எம் சேவையை மக்கள் சார்ந்திருப்பது அதிகமாகிறது. மேலும், ஏ.டி.எம்-கள் மூடப்பட்டால் அவர்கள் பெரியளவில் பாதிக்கப்படுவார்கள்.
இன்றும் சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை.
அரசாங்கள் மற்றும் ஆர்.பி.ஐ-இன் புதிய விதிகளையடுத்து, ஏ.டி.எம் தொழில் இழப்புகளை சந்தித்து வருவதாகவும், இன்னும் அழுத்தம் அளித்தால், சிறு நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் 1.13 லட்ச ஏ.டி.எம்களை மூடும் அபாயம் ஏற்படும் என்றும் ஏ.டி.எம் தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் ஸ்ரீனிவாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் பணம் எடுக்கும் ஏ.டி.எம்-களுக்கு பின்னால் விரிவான தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை இயங்குகிறது. இயந்திரங்களை தயார் செய்வது, அதனை நிறுவி, செயல்படுத்தும் நிறுவனங்கள், ஏடிஎம்-ல் பணம் போடுபவர்கள் மற்றும் ஏ.டி.எம்களுக்கு வெளியே இருக்கும் காவலர்களும் இதில் அடங்குவார்.
உங்களை சுற்றி இருக்கும் ஏடிஎம்கள் அனைத்தும், குறைந்தது தொழில்முறையில் ஒரே மாதிரியானது அல்ல.
நீஙகள் பயன்படுத்தும் ஏடிஎம்-கள் பொதுவாக மூன்று வகைப்படும்:
1. வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம்-கள். ஒன்று வங்கிகளே அதனை நிர்வகிக்கும் அல்லது ஏ.டி.எம் தொடர்பாக பணிபுரியும் நிறுவனங்களுக்கு கீழ் குத்தகைக்கு விடப்படும்.
2. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் கமிஷன் தருவதற்கு ஏற்ப, ஏ.டி.எம்-கள் வழங்குவதற்காக நிறுவனங்களிடம் ஒப்பந்தம் வழங்கப்படும்.
மேல் குறிப்பிட்டுள்ள எந்த மாதிரியாக இருந்தாலும், இயந்திரங்களுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பு வங்கிகளுக்கானதுதான்.
3. 2013ஆம் ஆண்டில், வங்கிகளுக்கு ஏ.டி.எம் சேவை வழங்கும் உரிமத்தை சில நிறுவனங்களுக்கு வழங்கியது. அவர்கள் சொந்தமாக ஏ.டி.எம் இயந்திரங்களை நிறுவி, கமிஷன் அல்லது ஏ.டி.எம் பரிமாற்ற கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஏ.டி.எம் முன்பு நீண்ட வரிசையில் மக்கள்
இந்த மாதிரியில், NBFC (வங்கிகள் அல்லாத நிதி நிறுவனம்) தேர்வு, வாடகைக்கு எடுப்பது, பார்த்துக் கொள்வது, இயந்திரங்களில் பணம் போடுவது மற்றும் பிற வேலைகளுக்கு பொறுப்பாகும்.
இந்திய தேசிய கட்டண நிறுவம் மற்றும் ஆர்.பி.ஐ விவாதித்த பின்னர், பரிவர்த்தனைகளுக்கு வங்கி மூலம் வழங்கப்படும் கமிஷன் குறித்து முடிவெடுக்கப்படும். கடந்த 5 ஆண்டுகளில், இந்த கமிஷன்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், ஏ.டி.எம் இயந்திரங்களை செயல்பாட்டில் வைப்பதற்கான செலவுகள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக இத்துறையில் வேலை பார்ப்பவர்கள் கூறுகிறார்கள்.
"ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் எங்களுக்கு 15 ரூபாய் கமிஷன் கிடைக்கிறது. ஆனால், தற்போது அதனைவிட செலவு அதிகமாகிவிட்டது. தற்போது அரசாங்கம் மற்றும் ஆர்.பி.ஐ கொண்டுவர உள்ள பல புதிய விதிகளால், செலவுகள் மேலும் அதிகமாகும்," என்று ஸ்ரீனிவாஸ் கூறுகிறார்.
சமீபத்தில், ஏ.டி.எம்-களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கூடிய பாதுகாப்புகள் வழங்குவது தொடர்பாக பல விதிகளை உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.
இதையெல்லாம் செயல்முறைப்படுத்த ஏடிஎம் தொழிலுக்கு குறைந்தது 3,500 கோடி ரூபாய் தேவைப்படும் என்று ATM தொழில் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. பணமதிப்பிழப்பை தொடர்ந்து ஏ.டி.எம் இயந்திரங்கள் மாற்றப்பட்ட நிலையில், இது மிகவும் அதிகம் என்றும் அக்கூட்மைப்பு கூறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :