மது அருந்தியதால் மூன்றாண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட ஏர்-இந்தியா விமானி

ஏர் இந்தியாவின் மூத்த விமானி ஒருவர் மது அருந்தியிருந்ததால் அவருக்கு மூன்றாண்டு தடை விதித்திருக்கிறது இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்.

ஞாயிற்றுக் கிழமையன்று டெல்லியில் இருந்து லண்டனுக்கு செல்லவிருந்த விமானத்தின் விமானி அர்விந்த் கத்பாலியா. இவர் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல் இயக்குநராகவும் இருக்கிறார்.

மது அருந்தும் சோதனையில் அவர் தோல்வியடைந்ததும், அவருக்கு பதிலாக வேறொரு விமானி, விமானத்தை இயக்க நியமிக்கப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை கேப்டன் அர்விந்த் கத்பாலியா நிராகரிக்கிறார்.

இதே தவறுக்காக அர்விந்த் கடந்த ஆண்டும் மூன்று மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்று விமானத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

"விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு அர்விந்த் கத்பாலியாவின் விமான ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது" என்று விமான போக்குவரத்து கண்காணிப்பகம் கூறுகிறது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் உட்பூசலில் தான் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாக கூறும் அர்விந்த் கத்பாலியா, தனக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளுக்கு சவால் விடுக்கப் போவதாக தெரிவித்தார்.

விமானத்தை இயக்குவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னதாக விமானிகள் மது அருந்தக்கூடாது என்று விமான போக்குவரத்து விதிகள் கூறுகின்றன. விமானத்தை செலுத்துவதற்கு முன் மது அருந்தியிருக்கிறார்களா என்ற பரிசோதனை விமானிகளுக்கு நடத்தப்படும்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் இருந்து மும்பைக்கு வந்த இருவரையும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் காக்பிட் அறைக்குள் சண்டையிட்ட ஆண் விமானியும் பெண் பணியாளரும் ஐந்தாண்டுகள் பணி செய்வதற்கு தடை விதித்து உத்தரவிட்டது டி.ஜி.சி.ஏ.

பிறகு அவர்கள் இருவரையும் ஜெட் ஏர்வேஸ் தனியார் விமான நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :