காடுகளை காக்க வேட்டையாடிகள் எடுத்த உன்னத முடிவு

வட கிழக்கு இந்திய மாநிலமான நாகலாந்தில் வசிக்கும் இனக்குழு ஒன்று காடுகளை காப்பதற்காக தங்களது பாரம்பரியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.

புகைப்படக் கலைஞர் சயான் ஹஸ்ரா நாகலாந்தின் கிராமங்களில் பயணித்து அம்மக்களின் வாழ்க்கையை புகைப்படமாக பதிவு செய்துள்ளார்.

அவர் அம்மக்களின் வாழ்வு குறித்தும், தம் அனுபவங்கள் குறித்தும் இங்கே விளக்குகிறார்.

சயவியின் கதை

சயவி ஜின்யீக்கு வயது 76 ஆகிறது. ஒரு காலத்தில் அந்த பகுதியிலேயே அவர்தான் சிறந்த வேட்டையாடி. ஆனால் 2001 ஆம் ஆண்டு நாட்காட்டியில் ஏதோ ஒரு நாளில் வேட்டையாடுவதை நிறுத்தினார்.

அவர் மட்டுமல்ல அந்த கொனொமா பழங்குடி இனக்குழுவில் உள்ள அனைவரும் 20 ஆண்டுகளுக்கு முன் வேட்டையாடுவதை நிறுத்தி உள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் உன்னதமானது. "எதிர்கால தலைமுறைக்கு நிலையான சூழலியல் வேண்டும்" என்பதுதான் அந்த காரணம்.

பல நூற்றாண்டாக இந்த மலை கிராமத்தில் வேட்டைதான் தொழிலாக இருந்திருக்கிறது. வாழ்வாதாரத்திற்கு வேட்டையை மட்டும் நம்பி இருக்கிறார்கள். இவை அனைத்தையும் கடந்து வேட்டை அவர்கள் வாழ்க்கை முறையுடன் கலந்திருக்கிறது.

வேட்டை வாழ்வு

சில பழங்குடிகள் 1994ஆம் ஆண்டு வேட்டையாடுதலுக்கு எதிராக பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். மயில் போன்ற ஒரு விதமான பறவை அழிவின் விளிம்பிற்கு சென்றதை அடுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான பறவை முன்பொரு சமயத்தில் இருந்திருக்கிறது. உணவுக்காக வேட்டையாடப்பட்டதை தொடர்ந்து அந்த பறவையின் எண்ணிக்கை மிக மோசமாக குறைந்திருக்கிறது.

தொடர் பிரசாரத்தை அடுத்து கிராம பஞ்சாயத்து 20 சதுர கி.மீட்டருக்கு வேட்டையாட தடை விதித்து இருக்கிறது. 1998 ஆம் ஆண்டு இந்த பகுதி சரணாலயமாக ஆகி இருக்கிறது.

வேட்டையாடுதலை மட்டும் கிராம பஞ்சாயத்து தடை செய்யவில்லை. அதனுடன் மரம் வெட்டுதல், சுரங்க தொழில் என இயற்கையை சுரண்டும் அனைத்து தொழில்களையும் கிராம பஞ்சாயத்து தடை செய்திருக்கிறது.

அந்த ஊரின் வழக்கப்படி வேட்டையாடப்பட்ட விலங்களின் தலையை தங்கள் வீட்டில் காட்சிக்காக வைப்பர்கள். இப்போது பலர் அந்த பழக்கத்தை கைவிட்டிருக்கிறார்கள்.

வேட்டைக்காக வைத்திருந்த துப்பாக்கியையும் பலர் திரும்ப அளித்திருக்கிறார்கள்.

வாழ்க்கையே கொண்டாட்டமாய்

வாழ்க்கையய் கொண்டாட்டமாய் இந்த மக்கள் எப்போதும் கழிப்பார்கள். கிராம திருவிழா மற்றும் பஞ்சாயத்து கூட்டங்களின் போது இசையுடன் நடனமாடி வருவார்கள்.

கொனாமா வனபதுகாப்பு மற்றும் ட்ரகொபான் சரணாலயத்தின் தலைவர் எங்கள் அடுத்த தலைமுறைக்கு வனத்தை பறவையை மிச்சம் வைக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :