You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிக்கும் சாமியார்கள் #வாதம்விவாதம்
’சாமியார்கள்’ பாபா ராமதேவ் மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகியோர் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சமீபத்தில் கருத்து கூறியுள்ளனர்.
"சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்ளும் பாபா ராம்தேவ் மற்றும் ஜக்கி வாசுதேவ் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பேசுவது முரண்பாடானதா? தங்களின் தனிப்பட்ட கருத்தை பகிர்வதில் தவறேதும் இல்லையா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"கார்பரேட் சாமியார்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்," என்று கேள்வி எழுப்புகிறார் பாஸ்கர் சத்தியமூர்த்தி.
"ஸ்டெர்லைட் ஆலைக்கு இதுவரை ஆதரவு தந்தது அனைவருமே ஆன்மீக அரசியலை சேர்ந்தவர்கள்," என்கிறார் மெரினா எனும் ட்விட்டர் பதிவாளர்.
"இயற்கை வளங்களை, காடுகளை அழித்த இந்த கார்பரேட் சாமியார்கள் மக்களை பற்றி கவலை பட மாட்டார்கள்," என்று கூறியுள்ளார் இஸ்மாயில் ஷரிஃப்.
"இந்தியாவில் ஆன்மீகவாதி, நடிகர் இருவர் மட்டுமே நாட்டை வழிநடத்த தகுதியானவர்கள் ஏனெனில் மக்கள் அனைவரும் அயோக்கியர்கள்," என்று செந்தில் விஜய் எனும் ஃபேஸ்புக் நேயர் எள்ளலாக பதிவிட்டுள்ளார்.
"பாஜகவின் கருத்தை மக்களிடம் திணிக்கும் முயற்சி.இவர்களுக்கும் தூத்துக்குடிக்கும் என்ன சம்பந்தம்?இவர்கள் யார் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பேச?கார்பரேட் கைகூலிகள் இவர்கள். நதிகள் இணைப்பு ராலி என்று இவர் கார்பரேட்டிடம் வாங்கிய பணம் எவ்வளவு?2சாமியாருக்கும் எப்படி இவ்வளவு பணம் வந்தது," என்று கேள்வி எழுப்புகிறார் வினோ ஸ்டாலின் எனும் ட்விட்டர் நேயர்.
"திரு.ஜக்கிவாசுதேவ், திரு.பாபா ராம்தேவ் இவர்கள் இருவரும் ஈஷா மற்றும் பதாஞ்சலி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்திக் கொண்டு இருப்பவர்கள். இவர்கள் மற்றொரு கார்ப்பரேட் நிறுவனமான ஸ்டெர்லைடுக்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள்," என்கிறார் விவேகானந்த் சுப்பாராயன் எனும் ஃபேஸ்புக் நேயர்.
"அய்யா எஜமான் நீங்க எங்க தூத்துக்குடி மக்களோட மக்களால வீட்ல வாழ்நாள் முழுக்க தங்கி அவங்க குடிக்கிற தண்ணிய நீங்களும் குடிக்கிறேன்னு சொல்லுங்க நாங்க எல்லாரும் போராடுறது விட்டிருவோம்," என்று எள்ளலாக கூறியுள்ளார் சோம சுந்தரம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்