You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''முடக்க சொன்னது ஸ்டெர்லைட்டை; முடக்கியது இன்டர்நெட்டை''
தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணையத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது அரசு. இது புரளி பரவுவதைத் தடுக்கும் முயற்சியா, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி தமிழ் வாசகர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
''இயற்கை சூழலை பாதிப்புக்கும் தொழிற்சாலையை எதிர்த்துப் போராடிய மக்களிடம் இணக்கமாக நடந்து கொள்ளாமல், இணையத்தை முடக்கி தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்குக் கையாளும் நடவடிக்கைகளை எடுத்து, தமிழக அரசு தனது சர்வாதிகார போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. இணையத்தை முடக்கினாலும், மக்கள் இதயங்களில் இயற்கை சூழலை காப்பதற்காக எழுந்துள்ள வீரியமிக்க கருத்துகளை ஒருபோதும் கலைக்க இயலாது, அது மேலும் வலுவான ஆழிப்பேரலை போன்றதொரு போராட்டத்திற்குத்தான் வழிவகுக்கும்.''
''முடக்க சொன்னது ஸ்டெர்லைட்டை முடக்கியது இண்டர்நெட்டை'' என்கிறார் அசோக் அனிஸ்
''புரளி பரவுவதை தடுக்கும் முயற்சியல்ல மாறாக உண்மை பரவுவதை தடுக்கும் முயற்சி'' என்கிறார் கோமான் முகமது
''இணையதளத்தை முடக்கியது -"தற்காப்பு முயற்சி. அரசின் கொடுமைகள் அதிகம் பரவாமல் தடுக்க'' என ட்விட்டரில் எழுதியுள்ளார் ரங்கசாமி குமாரன்
''தீவிர கருத்து சுதந்திரத்தை தடுக்கும் முயற்சி. இணையத்தால் இளைஞர்களுக்கு நடக்கும் பிரச்சனை தெரிந்து போராட்டம் வெடிக்கிறது என நினைக்கின்றனர்'' என குறிப்பிட்டுள்ளார் கதிர்வேலன் எனும் நேயர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்