You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடகா: விவசாயக் கடன் தள்ளுபடி - முதல்வர் எடியூரப்பாவின் முதல் கையெழுத்து
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதசார்பற்றது) ஆகிய கட்சிகளை மக்கள் புறக்கணித்து விட்டதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு, முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறினார்.
கர்நாடக மக்களுக்கு தாம் நன்றிக்கடன்பட்டிருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர் எடியூரப்பா, தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடகாவில் ஒரு லட்சம் வரையிலான விவசாயக் கடனை எடியூரப்பா தலைமையிலான அரசு தள்ளுபடி செய்துள்ளது. பெங்களூருவில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் எடியூரப்பா இது தொடர்பாக கையெழுத்திட்டுள்ளதாக ஊடக செய்திகள் கூறுகின்றன.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- கர்நாடக முதலமைச்சரானார் பி.எஸ் எடியூரப்பா; தர்ணா போராட்டத்தில் காங்கிரஸ்
- உலகப் பார்வை: மீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர் பலி
- வடகொரியா உச்சிமாநாடு: டிரம்ப் - கிம் சந்திப்பு நடக்குமென அமெரிக்கா நம்பிக்கை
- கர்நாடக ஆளுநர் ஏன் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைத்திருக்க கூடாது?
- அரச குடும்ப திருமணம்: மணமகளுக்கு உள்ள ஆடை கட்டுப்பாடுகள் என்னென்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்