குஜராத் கள நிலவரம்: உண்ண உணவும் இல்லை; உதவி தொகைக்காக காத்திருக்கும் கணவனை இழந்த பெண்கள்

ஓர் உடைந்த கட்டில், சேறுகளிடையே இருக்கும் நடைபாதை, உடைந்த சிமெண்ட் பலகைகளால் ஆன காலியான சிறு குடிசைகள் மற்றும் சோகமான முகங்கள் ஆகியவை ஹஸீனா சோட்டாவின் வீட்டுக்கு சென்றவுடன் உங்களை வரவேற்கும்.

குஜராத் கள நிலவரம்

தண்ணீர் வசதி இல்லை, மின்சார வசதி இல்லை, சமையல் எரிவாயு இல்லை, மண்ணெண்ணெய் அடுப்பு வசதி இல்லை மற்றும் சாப்பிடுவதற்கு உணவு கூட இல்லை என்பதே அவரது வீட்டின் யதார்த்தம். குஜராத்தில் உதவித் தொகைக்காக காத்திருக்கும் கணவனை இழந்த பெண்களில் சோட்டாவும் ஒருவர்.

2015-ல் கணவன் இறந்தபிறகு அவருக்கு நிலையான வருமானம் இல்லை. அவரும் அவரது நான்கு ஆண் பிள்ளைகளும் ஒரு வேளை உணவுக்குக் கூட அடுத்தவரையே நம்பியிருந்தனர். அருகிலிருப்பவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கவேண்டிய நிலை அவருக்கு. ஏனெனில் உணவை சமைப்பதற்கான பணம் அவரிடம் இல்லை.

''அவருக்கு பணம் இல்லையெனில் அப்போது மாநில அரசின் கணவனை இழந்த பெண்களுக்கான உதவித் தொகை திட்டத்தின் கீழ் பலன் பெற்று கொண்டிருப்பது யார்? '' என உள்ளூர் செயற்பாட்டாளரான மலியா பகுதியை சேர்ந்த ஜ்யோட்ஸ்னா ஜடேஜா பிபிசியிடம் பேசியபோது கேள்வி எழுப்புகிறார்.

ஜும்மாவடி என்ற கிராமத்தை பிபிசியின் பணித்திடமான் பிபிசி ஷி அடைந்தவுடன், சோட்டாவுடன் பேசியது.

'' எனக்கு உதவித்தொகை கிடைத்தால் என்னுடைய சிறு குழந்தைகளுக்கு என்னால் உணவு கொடுக்க முடியும். எனது குழந்தைகள் பசியுடன் தூங்குவதை பார்ப்பது மிகவும் வலிநிறைந்ததாக உள்ளது" என்கிறார் சோட்டா.

உதவி தொகைக்காக காத்திருக்கும் கணவனை இழந்த பெண்கள்

அங்குள்ள மாநில அரசு விதிகளின்படி 18 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட கணவனை இழந்த பெண்கள் அனைவரும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு ஏற்றவர்களாவர். ஆட்சியர் வழியாக அலுவல் ரீதியாக விண்ணப்பத்தை பார்த்தப்பிறகு விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு அரசு கருவூலத்தில் இருந்து உதவித்தொகை கொடுக்கப்படும் என அரசு கூறியுள்ளது.

ஆனால் கணவனை இழந்த பெண்களுக்கு சரியான உதவி சென்று சேர்வதை 'லஞ்சம்' அனுமதிப்பதில்லை. குஜராத்தின் முதல் அமைச்சர் விஜய் ரூபானி கடந்த 2016 -ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் 1.52 லட்சம் கணவனை இழந்த பெண்கள் உதவித்தொகைக்கான பயனாளிகளாக இருக்கின்றனர் என தெரிவித்தார்.

சோட்டாவின் கணவர் சாதிக் இறந்தது நவம்பர் 19,2015. அவர் இறந்த சில மாதங்கள் கழித்து சோட்டா உதவித்தொகைக்கு விண்ணப்பித்தார். '' இரண்டு வருடம் கடந்தும் கூட நான் இன்னமும் எனக்கான உதவித்தொகையை பெறவில்லை. எப்போது நான் அலுவலகம் சென்றாலும் அவர்கள் என்னிடம் எனக்கு கடிதம் அனுப்புவார்கள் என கூறுகின்றனர் . ஆனால் இதுவரை எனக்கு ஒரு கடிதம் கூட வந்தது கிடையாது'' என்கிறார் சோட்டா.

ஹசீனாவின் விண்ணப்பம் தொடர்பாக பிபிசி, மோர்பி மாவட்டத்தின் மலியா தாலுகாவின் நிர்வாக நடுவரை தொடர்பு கொண்டது. நிர்வாக நடுவர் சோலங்கி கூறுகையில், “ஜும்மாவடி கிராமத்தில் கிராம பஞ்சாயத்து இல்லையென்பதால் அவரது விண்ணப்பத்தில் கையெழுத்திட கிராம பஞ்சாயத்து தலைவர் இல்லை. ஆனால் நான் தற்போது அவரது விண்ணப்பத்துக்கு சாட்சியாக கையெழுத்திட்டுள்ளேன். அவரது விண்ணப்பம் அரசு செயல்முறைக்குள் சென்று அவருக்கு உதவித்தொகை கிடைக்கும் என உறுதி செய்கிறேன்'' என்றார்.

உதவி தொகைக்காக காத்திருக்கும் கணவனை இழந்த பெண்கள்

ஜும்மாவடி கிராமம் தனித்த கடற்கரை கிராமமாகும். உள்ளூர் அரசாங்கமோ அல்லது கிராம பஞ்சாயத்தோ அதனை நிர்வகிக்கவில்லை.

அங்கு மட்டுமல்ல நகரங்களில் கூட நிலைமையில் மாற்றமில்லை. அகமதாபாத்தில் வசிக்கும் புஷ்பாதேவி ரகுவன்ஷி கடந்த செப்டம்பர் 2016 முதல் உதவித்தொகைக்காக காத்திருக்கிறார். '' அவர்கள் என்னிடம் வெவ்வேறு ஆவணங்கள் குறித்து கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நான் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டேன். மேலும் இதுவரை மூன்றாயிரம் ரூபாய் வரை செலவழித்துவிட்டேன். ஆனால் இன்னமும் எனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை'' என்கிறார் ரகுவன்ஷி.

ஒரு நல்ல குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ரகுவன்ஷி தனது 16 வயது மகன் மற்றும் 14 வயது மகள் ஆகியோருடன் வசிக்கிறார்.

'' எனது மகன் வேலைக்காக முயற்சித்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் சிறுவன் தொழிலாளர் சட்டத்தால் அவருக்கு யாரும் வேலை தருவதில்லை. அவனுக்கு வேலை கிடைத்தாலும் அவனுக்கு உரிய ஊதியத்தை யாரும் கொடுக்க போவதில்லை'' என்றார் அவர். ரகுவன்ஷியின் மகள் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். அவரது மக்களுக்கு அடிக்கடி பள்ளி கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதால் அவமானத்தைச் சந்திக்கிறார்.

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிராவின் போதை பொருளுக்கு எதிரான போர் #BBCShe

'' அவள் அடுத்தவருடம் பத்தாம் வகுப்பு படிக்க வேண்டும். பயிற்சி வகுப்புக்குச் செல்லாமலேயே தான் நல்ல மதிப்பெண்களை கடுமையான உழைப்பின் மூலம் எடுப்பேன் என என்னிடம் என் மகள் கூறியிருக்கிறாள். அவள் மிகவும் புத்திசாலி மற்றும் எதையும் புரிந்து கொள்ளக்கூடியவள்'' என ரகுவன்ஷி கூறினார்.

பிபிசி 'ஷி'யிடம் தொடர்ந்து பேசிய ரகுவன்ஷி, '' எனக்கு உதவித்தொகை கிடைத்தால் அதனை எனது மகளின் படிப்புக்குப் பயன்படுத்தமுடியும்'' என்றார். புஷ்பா தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறார். அந்த வருமானம் அகமதாபாத்தில் வாழ போதுமானதாக இல்லை.

தனது தந்தை இறந்த பிறகு ரகுவன்ஷியின் மகள் பள்ளிக்கு உணவு எடுத்துச் சென்றதே இல்லை. '' என்னுடைய நண்பர்கள்தான் எனக்கு உணவை பகிர்ந்து தருவார்கள்'' என்கிறாள் ரகுவன்ஷியின் மகள். கடுமையான நிதி நெருக்கடி அவர்களை அந்த நகரத்தை விட்டு துரத்த முயல்கிறது.

அகமதாபாத்தில் உள்ள ஒரு செயற்பாட்டாளர் அங்கிதா பஞ்சல் பிபிசி 'ஷி' யிடம் பேசுகையில், அரசு விதிகளின் படி கணவனை இழந்த பெண்களுக்கு அவர்கள் விண்ணபித்த 90 நாட்களுக்குள் உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் ஆனால் அதனை கண்காணிக்க எந்த அரசு அதிகாரியும் இல்லை. அபராதம் கட்டவேண்டியது குறித்து யாருக்கும் கவலை இல்லை. அவர்கள் உதவித்தொகை விண்ணப்பத்தை தீவிரமாக அணுகுவதில்லை. இதுவே தாமதத்திற்கு காரணம் என்றார்.

உதவி தொகைக்காக காத்திருக்கும் கணவனை இழந்த பெண்கள்

நகரத்தைச் சேர்ந்த சமூகவியலாளராவர் கவுரங் ஜனி கூறுகையில், குஜராத் மாதிரி வளர்ச்சி என்பது நகர வளர்ச்சி மற்றும் வியாபார மேம்பாடு என்பதையே முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளது. சமூகவியல் துறையானது வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது.

'' கணவரை இழந்த பெண்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் பெரும்பாலும் ஏழை மக்களே. அவர்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து குரல் உயர்த்தவோ அரசுக்கு அழுத்தம் தரவோ வழியில்லை. ஆகவே அவர்களது விண்ணப்பங்கள் தீவிரமாக எடுத்து கொள்ளப்படுவதில்லை. அதிகாரிகள் இந்த உதவித்தொகையை, தொண்டு பெற விண்ணப்பிக்கப்படுபவை என நினைக்கிறார்கள். ஆனால் அது அவர்கள் உரிமை என்பதை அறிந்து பரிசீலிப்பதில்லை '' என்றார் கவுரங்.

எப்படியியானும் பிபிசி ஷி யிடம் பேசிய குஜராத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ஈஷ்வர் பர்மர், தனது துறையானது கணவனை இழந்த பெண்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து புகார்களை பெற்றுள்ளது என்றார். மேலும் ''சட்டமன்ற கூட்டம் தற்போது முடிந்துவிட்டது. விரைவில் அதிகாரிகளுடன் பேசி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தும் அதிகாரிகளுக்கு தகுந்த வழிகாட்டி மற்றும் விதிகளை வகுப்பேன் என தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: