You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம் விவாதம்: "மோதி அலை என்பது ஒரு மாயை"
உத்தரப்பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது. 'நரேந்திர மோதி அலையின்' தாக்கம் குறைந்துவிட்டது என்று கருதலாமா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலத்தை பாஜக குறைத்து மதிப்பிட்டுவிட்டதா? என்று நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே.
"இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் குறைவென்பதால் இந்த வெற்றியை பெரும்பான்மை மக்களின் வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் எனினும், தங்கள் கோட்டை என்று கருதப்படும் தொகுதிகளில், பெரிதாக செயல்படாததை பார்க்கும்போது எதிர்வரும் தேர்தல்களுக்கான பெரிய திட்டங்களை வகுக்க மௌனமாக பயணிக்கிறதா என்ற கேள்வி எழுவதாக" பிபிசி தமிழ் ஃபேஸ்புக் நேயர் சக்தி சரவணன் தெரிவித்துள்ளார்.
சரோஜா பாலசுப்பிரமணியன் என்ற நேயர், "மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்தால் மட்டுமே வரும் தேர்தல்களில் பாஜகவால் வெற்றி பெற முடியும். " என்று குறிப்பிட்டுள்ளார்.
"முதலில் பதிவான வாக்கு விகிதத்தை பார்க்கும்போது, அடுத்த இடைத்தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு எந்த பாதிப்புகளையும் ஏற்படுத்தப் போவதில்லை" என்கிறார் மஹே இந்திரன்.
"ஊழல் ஒழிப்பு, வேலைவாய்ப்பு என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, பணமதிப்பிழப்பு, ஜி. எஸ். டி போன்றவற்றை கொண்டுவந்து மக்கள் மீது தொடுத்த தாக்குதலால்தான் இந்த தோல்வி" என ட்விட்டர் நேயர் பாலன் சக்தி கூறுகிறார்.
''வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்றுசேர்ந்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும்'' என்கிறார் சரோஜா.
"முதலில் மோதி அலை என்பதே ஊடகங்களைக் கையில் போட்டு பாஜகவினர் உருவாக்கிய கானல் நீர் அலைதான்" என்று கூறியுள்ளார் ட்விட்டர் நேயர் சீனி. சுப்பிரமணியன்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்