You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இதயத்தில் ஈரமிருந்தால் பேருந்துக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுங்கள்: ஸ்டாலின்
தமிழக அரசு அறிவித்த பேருந்துக் கட்டண உயர்வை நாளைக்குள் திரும்பப் பெறாவிட்டால், நாளை மறுநாள் முதல் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட அவர் "கனத்த இதயத்துடன் இந்தக் கட்டண உயர்வை அறிவித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். உண்மையாகவே உங்கள் இதயத்தில் ஈரமும், இரக்கமும் இருப்பது உண்மை என்று நிரூபிக்க வேண்டுமென்றால், இந்தப் பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். திரும்பப் பெறவில்லையென்றால் உடனடியாகப் பதவி விலக்கிவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள்," என்று கூறினார்.
"இப்போது அனுமதி பெற்று போராட்டம் நடத்துகிறோம். கட்டணத்தைக் குறைக்க நீங்கள் தயாராக இல்லையென்றால் திமுக சார்பில் அனுமதியின்றி போராட்டங்கள் நடக்கும். அவை மொழிப்போர் போராட்டம், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல இருக்கும்," என்று அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் திமுக நடத்திய ஆர்ப்பாட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
சேப்பாக்கத்தில் ஸ்டாலின் கலந்துகொண்ட போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்