You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய அரசியலமைப்பு: அதிகம் அறியப்படாத 6 தகவல்கள்
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
இன்றுடன் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டு 68 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அரசியலமைப்புச் சட்டம் பற்றிய அதிகம் அறியப்படாத 6 தகவல்கள் இதோ.
- இதுவரை இந்திய அரசியலமைப்பு சட்டம் 101 முறை திருத்தப்பட்டுள்ளது. முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை முன்மொழிந்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, கருத்துரிமை தொடர்பான பிரிவுகள் அதில் திருத்தப்பட்டன.
- அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்ட 25 ஆண்டுகள் கழித்து, உள்நாட்டு அரசியல் குழப்பங்களை காரணம் காட்டி அவசர நிலையை 1975இல் பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதம இந்திரா காந்தி. நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட 42வது திருத்தத்தில், 'மதச்சார்பின்மை', 'சோஷியலிசம்' ஆகிய சொற்கள் அரசியலமைப்பின் முகவுரையில் சேர்க்கப்பட்டன.
- நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்ய இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 352, ஒரு மாநிலத்தில் பிரகடனம் செய்ய பிரிவு 356 மற்றும் நிதிநெருக்கடியால் அவசர நிலை பிரகடனம் செய்ய பிரிவு 360 ஆகியன வழிவகைசெய்கின்றன.
- பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசு கலைக்கப்பட்டு அமல்படுத்தப்படும் நெருக்கடி நிலை, 'குடியரசுத் தலைவர் ஆட்சி' எனப்படும். அப்போது அந்த மாநில அரசு மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் வரும்.
- இந்திய மற்றும் வங்கதேச அரசுகளிடையே 1974இல் கையெழுத்தான நிலங்களை பரிமாறிக்கொண்ட ஒப்பந்தத்தை உறுதிசெய்ய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் தேவைப்பட்டது. அதற்காக 100வது முறையாக அது திருத்தப்பட்டது.
- கடைசியாக அரசியல் அமைப்பு திருத்தும் செய்யப்பட்டது, கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி வரி அறிமுகம் செய்யப்பட்டு நாடு முழுவதும் ஒரே வரி விகிதம் அமல்படுத்தப்பட்டபோதுதான்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்