நாளிதழ்களில் இன்று: ஆதார் அட்டை இல்லாததால் 'ரேஷன்' மறுக்கப்பட்ட பெண் பட்டினிச்சாவு

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லாததால் நியாய விலைக் கடையில் உணவுப்பொருட்கள் மறுக்கப்பட்டு, லுகி முர்மு எனும் 32 வயது பெண் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக அவரது அண்டை வீட்டினரும், செயல்பாட்டாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு முன்பும் அந்த மாநிலத்தில் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து, பொது விநியோக திட்டத்தை சீர் செய்ய அம்மாநில அரசு முயன்று வருகிறது.

தினத்தந்தி

வரும் மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால் மட்டுமே நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

தினமணி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்ற பிரதமர் நரேந்திர மோதி அழைக்கப்பட்டிருப்பது ஒரு பெருமை என்று தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.

இந்தியப் பொருளாதாரம் வளர்வது உண்மையாக இருக்கலாம். ஆனால், அது சமச்சீர் வளர்ச்சியாக இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள்தான் இருக்கும் என்று சி.பி.எஸ்.இ உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

பிராந்திய மொழிகளில் அத்தேர்வை எழுதும் மாணவர்களுக்கு வெவ்வேறு வினாத்தாள் வழங்கப்படும் நடைமுறை இனி பின்பற்றப்படாது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :