கனடா தமிழர்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் பொங்கல் வாழ்த்து உரை

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்கு வாழும் தமிழ் சமூகத்தினருக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

வேட்டி சட்டை அணிந்து தமிழர்களோடு பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

அவரது பொங்கல் வாழ்த்தின் முழு உரை வடிவம் இங்கே

''வணக்கம். இன்று (14.01.18) கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் நான்கு நாள் நடக்கும் அறுவடை பண்டிகையின் தொடக்கமாக தைப் பொங்கல் கொண்டாடுகிறார்கள். தை பொங்கல் அறுவடை பரிசுகளுக்கு நன்றி கூற வேண்டிய தருணம்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டாட கிடைக்கும் ஒரு வாய்ப்பு பொங்கல் திருநாள். கனடா தமிழர்களின் வலுவான வேர்களை பிரதிபலிக்க ஜனவரியை நாங்கள் தமிழ் பாரம்பர்ய மாதமாக கொண்டாடுகிறோம்.

கனடா தமிழர்கள் நமது நாட்டிற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியிருக்கிறார்கள். கனடாவை திறந்த மனதோடு, அனைவருக்குமான வலுவான நாடாக மாற்ற கனடா மக்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள்.

2018-இல் நாம் இணைந்து முன்னோக்கிச் செல்லும்போது நம்மை ஒன்றினைக்கும் மதிப்புமிக்க விஷயங்களை தொடர்ந்து கொண்டாடி, கனடாவை சிறந்த மற்றும் அனைவருக்கும் இணக்கமான நாடாக உருவாக்க தினமும் உழைப்போம்.

எனது குடும்பம் சார்பாக நானும் சோஃபியும் தைப் பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தமிழ் பாரம்பரிய மாத வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறோம். இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்.'' என்றார்

முன்னதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அங்கு வாழும் தமிழர்களுக்கு தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

தமிழில் வணக்கம் எனக் கூறி உரையை தொடங்கிய அவர், பிரிட்டனில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் தைப் பொங்கல் கொண்டாட சேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பழையவற்றை விடுத்து, புதிய வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ளும் நேரமிது என வாழ்த்தில் குறிப்பிட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :