You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிற மாநிலங்களில் தமிழக மாணவர்கள் சாதி, மொழி பாகுபாட்டுக்கு ஆளாகின்றனரா?
சாதி, பிராந்தியவாதம் மற்றும் மொழி பாகுபாட்டால் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக குஜராத்தில் பயிலும் தமிழக மாணவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.. இது தொடர்பாக, "கல்வி நிலையங்களில் இன்னமும் மொழி மற்றும் சாதிய பாகுபாடு நிலவுகிறதா? தமிழக மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதால் இதுபோன்ற பாகுபாட்டிற்கு ஆளாகிறார்களா?" என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு, நமது நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
பாலாஜி கே ஜெ, "சாதி மொழி பாகுபாடுகள் நிலவுவது உண்மைதான்.இதற்கென தனிப்பட்ட ஆய்வு தேவையில்லை.தினசரி செய்தகளே அதை நிரூபிக்கிறது.கொடுமை இது இந்தியாவின் உயர் கல்வி நிலையங்களிலும் நடப்பதுதான்.அதற்கு ரோஹித் வெமுலா தொடர்ந்து முத்துக்கிருஷ்ணன், ஜோயல் பிரகாஷ் மரணமே சாட்சி.இதை தமிழக மாணவர்கள் என்று மட்டும் சொல்ல முடியாது, தென் இந்திய மாணவர் எனும் நிலைபாட்டிலும் ஒடுக்கபடும் சமுதாயத்தில் இருந்து வரும் மாணவர்களின் நிலையில் இருந்தும் பார்க்க வேண்டும்...கல்வி அமைப்புகளில் கண்டிப்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு சீர் அமைக்க வேண்டும்..." என்று பதிவிட்டுள்ளார்.
"ராம் ராம் ராம் என்றும் சிவ சிவ சிவ என்றும் கூறிக்கொண்டு சமூக ஊழல்களை நிகழ்த்தும் முட்டாள்களை அறிவாளிகள் முற்போக்குவாதிகள் கல்விமான்கள் பட்டியலில் சேர்க்கும் நாம் இதுவல்ல இன்னும் ஏராளமான அவலங்களை சந்தித்தவண்ணமேயிருப்போம்.இதனை சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டார்.நமது சமூக அமைப்பே நமது பிரச்சனை சமயமல்ல என்று.நாமே நமக்குள் நடத்திவரும் காலனித்துவம்.தோல்வியடைந்துவரும் ஒரு இனம்.அடுத்தவனல்ல காரணம். நாம்" என்பது வேலாயுதம் கந்தசாமியின் கருத்து.
சக்தி சரவணனின் கருத்து: "பன்மைத்துவம் கொண்ட இந்நாட்டில் உரிமைகளும், வளர்ச்சியும், வாய்ப்புகளும் சரிசமமாக அனைத்து மொழியினருக்கும் கிடைக்கப் பெறாததால் வாய்ப்புகள் கிடைக்கும் ஒவ்வொரு முறையும் வேற்று மொழியினருக்கு எதிரான பாகுபாடுகள் எழுந்து மனிதம் மறக்கப்பட்டு வரம்புகள் மீறப்படுகின்றன. "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று கற்பிக்கும் பள்ளியில் மாணாக்கர் சேர்க்கைக்கு சாதிச் சான்றிதழ் தேவையும், பல்கலைக் கழக உயர் கல்விக்கு சாதியை மையப்படுத்திய இட ஒதுக்கீட்டின் இன்றியமையாமையின் புரிதல் பெற்றோர், மாணாக்கர் இடையே இல்லாததும் கல்வி நிலையங்களில் சாதிய பாகுபாடுகள் எழுவதற்கு முதற் காரணியாக அமைகிறது."
முத்துச்செல்வம் சொல்கிறார், "தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிலையங்களிலும் வேலைவாய்ப்புகளிலும் தமிழ்சாதியினர் புறக்கணிக்கப்படுகின்றனர். மெரிட் என்ற பெயரில் தமிழ்சாதியினரை புறக்கணிக்கின்றனர். மாற்று மொழி சாதியினருக்கு தான் தமிழ்நாட்டில் வாய்ப்புகள் அதிகம்."
"மாணவர்களுக்கு திறமை இருந்தும் சாதி மத வேறுபாடுகளால் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் முக்கியதுவம் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்பதே உண்மை" என்கிறார் புலிவலம் பாட்ஷா.
சரோஜா பாலசுப்பிரமணியன், "வேற்றுமையில் ஒற்றுமைதான் பாரதத்தின் சிறப்பே. அனைவரையும் அரவணைத்து செல்ல கல்லூரி நிர்வாகம் பயிற்சி அளிக்க வேண்டும். .அந்தந்த கல்லூரிகளில் கவுன்சலிங் கொடுக்க குழு அமைத்து தற்கொலைகளை தடுக்க வேண்டும்." என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்