ஆப்கானிஸ்தானில் இந்த போதை மருந்தின் பெயர் மூக்குப்பொடி

ஆப்கானிஸ்தானில் மூக்குப்பொடி பயன்பாடு அதிக அளவில் இருக்கிறது. போதை தரும் இந்த மூக்குப்பொடி, புகையிலை, சுண்ணாம்பு மற்றும் மரத்தூளால் தயாரிக்கப்படுகிறது.

இதன் நேரடியாக பயன்படுதுவதால் நுரையீரல், வயிறு மற்றும் வாயில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, சிறுநீரகம், இதயம் மற்றும் வேறுபிற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆப்கானிஸ்தானில் காந்தஹார் நகரில் சாலையோரங்களிலேயே மூக்குப்பொடி விற்பனை நடைபெறுகிறது.

போதை மூக்குப்பொடி பொட்டலமிடும் இடத்தில் குழந்தைகளும் இயல்பாக நடமாடுகின்றனர். ஆப்கானிஸ்தான், கைபர் பாக்தூன்க்வா மற்றும் பாகிஸ்தானின் பிற பழங்குடி பகுதிகளிலும் போதைக்காக மூக்குப்பொடி பயன்படுத்தப்படுகிறது.

புகையிலை, சுண்ணாம்பு மற்றும் மரத்தூளால் தயாரிக்கப்படும் இந்த போதை தரும் மூக்குப்பொடியை முதியவர்கள், இளைஞர்கள் உட்பட எல்லா வயதினரும் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் புகையிலை அல்லது குட்கா பயன்படுத்துவது போன்று ஆப்கானிஸ்தான் பகுதியில் இந்த போதை தரும் மூக்குப்பொடி பயன்படுத்தப்படுகிறது.

மூக்குப்பொடி பயன்படுத்தும் பழக்கம் முதன்முதலில் மேற்கு ஐரோப்பாவில் மருத்துவ காரணங்களுக்காக தொடங்கப்பட்டது. ஆனால் பிறகு தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவில் போதையை உட்கொள்ளும் ஒரு வழியாக மூக்குப்பொடி பயன்படுத்தப்பட்டது. 2008இல் இதன் பயன்பாட்டுக்கு துர்க்மேனிஸ்தான் தடை விதித்தது.

மூக்குப்பொடி பயன்படுத்தும் வழக்கம் ரஷ்யாவிலும் உள்ளது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது மிகவும் சிரமமானது. இந்த போதை மருந்து பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல, இது தொடர்பான வேலைகளில் ஈடுபட்டவர்களும் இதனை சுவாசிக்க நேர்வதால் வாய் மற்றும் தொண்டை நோய்கள் ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :