கபில் மோகனுக்கு அஞ்சலி செலுத்திய 'ஓல்டு மங்க்' ரசிகர்கள்

இந்திய மதுபானங்களிலேயே மிகவும் பிரபலமான 'ஓல்டு மங்க்' ரம்மை கண்டுபிடித்தமுன்னாள் ராணுவ அதிகாரி கபில் மோகன் தனது 88-ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், காஸியாபாத்திலுள்ள அவரது இல்லத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை மரணமடைந்தார்.

1954களில் மதுபான சந்தையில் அவர் அறிமுகப்படுத்திய ஓல்டு மங்க் ரம், உலகளவில் நீண்ட காலத்துக்கு அதிகம் விற்கப்பட்ட மதுபானமாகும்.

ஓல்டு மங்கின் வருகையையடுத்து கபில் மோகனின் மோகன் மீகின் நிறுவனம் இந்தியாவில் பெரும் வளர்ச்சியை கண்டது.

2010 ஆம் கபில் மோகனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

மோகனின் மறைவை தொடர்ந்து அவரது நண்பர்களும், ஓல்டு மங்க் ரம் ரசிகர்களும் தங்களுடைய அதிர்ச்சியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :