You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாதம் விவாதம்: "லிங்கா தோல்வியும், காக்கா முட்டை வெற்றியும்"
நடிகர்களின் முகத்தை வைத்து மட்டுமே ஒரு திரைப்படத்தை பார்க்கும் மனோபாவம் தமிழகத்தில் இருப்பதாக இயக்குநர் தங்கர் பச்சான் ஆதங்கப்பட்டு இருந்தார்.
நடிகர்கள் மட்டும்தான் ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்களா? இல்லை என்றால், வெற்றிக்கு காரணமான மற்றவர்களின் திறமை முழுமையாக அங்கீகரிக்கப்படுகிறதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு வாசகர்கள் பிபிசி தமிழின் சமூக வலைத்தளப் பக்கங்களில் அளித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
"தமிழ் சினிமாவில் கதை என்பது கதாநாயகர்களுக்கான களமாக இருக்கின்றது!நாயகனுக்கே எல்லாம் என காதல் நட்பு குடும்பம் சண்டை என அவனை சுற்றியே கதை வடிவமைக்க படுகிறது!..அதனையும் மீறி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் அனைத்தும் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கின்றன. பழைய பாடல்களின் அற்புதமான வரிகள் இன்றும் நிலைத்திருப்பதற்கு காரணம் கவிதைக்கு இசை அமைத்ததால்தான். கதாநாயகர்களுக்காக கதை எழுதுவது தற்காலத்தில் இசைக்கு வார்த்தைகளை தேடுவது போல்தான்!." என்று பதிவிட்டு இருக்கிறார் வேலு.
சக்தி சரவணனின் வாதம் இவ்வாறாக இருக்கிறது, "கதை, விறுவிறுப்புடன் உறுதியற்ற திருப்புமுனை புதிர்களோடு இறுதியை நோக்கிப் பயணிக்கும் காட்சியமைப்பு, காட்சிகளோடு இணைக்கும் இன்னிசை, உணர்ச்சியை உருவகப்படுத்தும் நல்ல வசனம், நேர்த்தியான விளம்பர யுக்தி என எண்ணற்ற நல்ல அம்சங்களே ஒரு திரைப்படத்திற்கு வெற்றியையும் பலருக்கான முகவரியையும் கொடுக்கும். முகங்களுக்காக வெற்றியும், முகங்களால் தோல்வியும், முகங்களுக்கான முகவரியும், முகவரியற்றோரை உச்சிக்கும், உயர்ந்தோருக்கு நல்ல படிப்பினையும் எனப் பல பரிணாமங்களில் பயணித்திருக்கிறது தமிழ் திரைப்படத் துறை."
"உண்மைதான் நட்சத்திரங்களை உருப்படியான நடிகர்களாக்கிய இயக்குநர்களையோ, பாடலைப் பாடிய பாடகர்களை,எழுதிய பாடலாசிரியர்களை விடுத்து கதாநாயகனே பாடுவது போன்றும் அவருடைய கருத்தாக நினைப்பதும் இன்று வரை தொடரும் மடமையாக இருக்கிறது.." என்கிறார் ஏ.கே அரசன்.
சரோஜா பாலசுப்ரமணியன், "கேரளாவைப்போல் கதைக்கு முக்கியத்துவமான திரைப்படங்கள் வரவேண்டும். கதைக்கு ஏற்ற கதாநாயகரைத் தேட வேண்டுமே தவிர கதா நாயகருக்காக கதைஎழுதும் மனோபாவம் மாறவேண்டும்."
" நமது மக்களின் ரசனைதான் காரணம். கண்ண திறந்தே புதைகுழியில விழுகிறாங்க..." என்று சிவகுமார் ஆதங்கப்படுகிறார்.
அம்மா அம்மாவின் கருத்து இது: "பிரபலங்கள் இல்லாத திரைக்கதைகள் வெற்றிப் படங்களாக ஓடுவதை சில காலங்களாக நாம் பார்த்து வருகிறோம்.கூட்டு உழைப்பு தான் சினிமா என்பதை தற்சமயம் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்."
"சில குப்பைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கோபுரங்களுக்கு இல்லை." என்கிறார் நெம்மேலி சுரேஷ்குமார்.
பிற செய்திகள்
சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்