You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உடுமலை சங்கர் கொலை வழக்கு தீர்ப்பு:: “மாற்றம் அவரவர் மனதில் ஏற்பட வேண்டும்”
உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கெளரவ கொலைகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமையுமா? என்ன தீர்ப்பு கொடுத்தாலும் சாதியக் கொடுமைகளைத் தடுக்க முடியாதா? என்று, வாதம் விவாதம் பகுதியில் பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.
இதற்கு அவர்கள் அளித்துள்ள கருத்துக்களை தொகுத்தளிக்கிறோம்.
"இந்திய வரலாற்றிலேயே ஒரு பெரிய தீர்ப்பு இது என்று பதிவிட்டுள்ளார்", விஜேந்திரன் தங்கராஜ் என்னும் நேயர்.
"சட்டங்கள் இன்னும் கடுமையாக வேண்டும்" என்கிறார், பிரபாகரன் என்பவர்.
"வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. பாதிக்கப்பட்டவர்கள், மாண்புமிகு நீதிபதி அரசு வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளை வாழ்த்துக்கள். நிச்சயமாக இந்த தீர்ப்பு சாதி ஆணவம் பிடித்தவர்களுக்கு ஒரு மரண அடி என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது. இந்த தண்டனை குற்றம் செய்தவர்களுக்கு மட்டும் பாடம் அல்ல குற்றம் செய்ய தூண்டும் உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். சமூகம் காதல் திருமணங்கள் மீதான பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் இது. அரசு தற்பொழுதாவது விழித்துக் கொண்டு ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்ற வேண்டும்."என்று பதிவிட்டுள்ளார் மணி எம்.என் என்னும் நேயர்.
"இந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் கண்டிப்பாக மாறும். அனைவரும் விடுதலையாவர்கள். ஒருவேளை தண்டனை வழங்கப்பட்டால் ஜாமீனில் வெளியே வரலாம். இது இந்தியா இங்கு சட்டம் ஒரு இருட்டறை." என்று சுந்தர் என்ற நேயர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"இந்த தீர்ப்பு மேலும் பல சாதிய அமைப்பை வலுபடுத்தியுள்ளதே தவிர. சாதிய அமைப்பை குலைத்து விடவில்லை."என்கிறார், மூக்கையா மாயன் மூக்கையா என்னும் நேயர்.
"ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு. எனவே என்னதான் தண்டனை கொடுத்தாலும் நடப்பது நடந்தே தீரும். தண்டனை பற்றி பயப்படுபவன் கொலை செய்யும் எண்ணத்துக்கே போக மாட்டான். மாற்றம் அவரவர் மனதில் தான் ஏற்பட வேண்டும்." என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் செந்தில் டாபர்ட் என்னும் நேயர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்