You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்: யார் காரணம்? என்ன தீர்வு?
சமீப காலமாக மாணவர் தற்கொலைகள் தமிழகத்திலும் இந்திய அளவிலும் அடிக்கடி செய்தியில் இடம்பெறுகிறது. அதற்கு காரணம் ஆசிரியர்கள் தரும் அழுத்தமா, பெற்றோரின் வளர்ப்பு முறையில் உள்ள குறையா என்று வாதம்-விவாதம் பகுதியில் பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்களின் கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
பெற்றோரின் வளர்ப்பு
"பெற்றோரின் வளர்ப்பில் ஆரம்பிக்கிறது. தங்கள் பிள்ளைகள் எது கேட்டாலும் வாங்கி கொடுப்பது நன்மை,தீமைகளை அறியாமல். தன்னம்பிக்கை சார்ந்த சுயஒழுக்கத்தை வீட்டில் பிள்ளைகளுக்கு கற்று தரவேண்டும். எதிலும் தோற்றாலும் பரவாயில்லை ஆனால் முயற்சியை மட்டும் கைவிடாதே நாங்கள் இருக்கிறோம் என்று கூறினாலே இது போன்ற தற்கொலையை தடுக்கலாம்," என்கிறார் ராஜேஷ் கண்ணா எனும் பிபிசி நேயர்'
இருவரும் காரணம்
"இருவரும்தான் காரணம். கற்றலில் குறை வைப்பதை இருதரப்பும் விரும்பவில்லை. படிக்காவிட்டால் உலகத்தில் வாழத் தகுதியில்லை என்று இருதரப்புமே பிள்ளைகளுக்கு கற்பிக்கிறது. பொறுமை,நிதானம்,சகிப்புத்தன்மை,மன்னிக்கும் குணம் போன்ற மனிதத்தன்மை ஆசிரியர்களிடம் இல்லை. பள்ளியிலோ வெளியிலோ பிள்ளைகளுக்கு நடப்பதை கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு பெற்றோருக்கு மனதும் நேரமும் இல்லை.தானாகவே வந்து சொல்வதற்கு சுதந்திரத்தையும், உரிமையையும் பெற்றோர்கள் வழங்கவில்லை.
"முதலாவது பெற்றோர்களின் அழுத்தம், இரண்டாவது ஆசிரியர்கள் மாணவர்களை நடத்தும் விதம், மூன்றாவது அரசின் தவறான கல்வி முறை,நான்காவது சமூக பின்னணி. இவை தான் மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணிகளாக அமைகிறது, " என்கிறார் அபுல் கலாம் ஆசாத்.
'ஆசிரியர்களின் கை கட்டப்பட்டுள்ளது'
"இன்றைய கல்வியும் பெற்றோர்களின் வளர்ப்பு முறையுமே காரணம்.தன்னிடம் பயிலும் மாணாக்கர்கள் நல்ல மாணாக்கர்கள் நல்லவர்களாக வளர வேண்டும் என ஆசை படுகிறார்களே தவிர இறந்து போக வேண்டும் என்று நினைப்பதில்லை.இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர்களின் கை கட்டப்பட்டுள்ளது. பணி பாதுகாப்பும் இல்லை.சில பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் கூட மது அருந்தி விட்டு வருகிறான் இவனை யார் கேள்வி கேட்பது.கேள்வி கேட்டால் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்கி கொண்டு தின்னுட்டு தேவையில்லாததை பேசிகின்றனர் என்று கூறுகிறார்கள்," என்பது ரமலான் பர்வீன் ஷாஜகான் எனும் நேயரின் கருத்து.
'இரண்டுமே இல்லை'
"இரண்டுமே இல்லை. பணம் மட்டுமே காரணமாக உள்ளன. தனியார் பள்ளிகள் ஆசிரியருக்கு அழுத்தம் குடுக்க. .. ஆசிரியர் மாணவ மாணவி களுக்கு அழுத்தம் தரப்படுகின்றது. .... பணம் ஒன்றை மட்டும் நோக்கமாக செயல்படும் பள்ளி உரிமையாளர்கள் மட்டும் தான் காரணம்," என்கிறார் கஜினி பிரபு.
ஏ.கே.அரசன் இவ்வாறு கூறுகிறார், "தன்னைப் பெற்றோர் முதல் ஆசிரியர், உறவினர்கள்,நண்பர்கள் குற்றம் சொல்வதையோ, ஆலோசனை சொல்வதையோ பிள்ளைகள், மாணவர்கள் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் பெறவில்லை."
நீட்!
தங்கராஜ் எனும் பிபிசி நேயர், "எப்போதும் 11வது படிக்கும் போது 12வது வகுப்பு ஆரம்பித்து விடுவார்கள் இந்த தடவை நீட் அது இதுன்னு சொல்லி காலதாமதம் ஆனதற்கு காரணம்.. மேலும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் காரணம் இல்லை," என்று கூறுகிறார்.
வாழ்க்கைக்கு கல்வி வீட்டிலும் இல்லை பள்ளிகளிலும் இல்லை என்கிறார் சிலுவைமுத்து.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்