You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம் விவாதம்: "கட் -அவுட் அரசுக்கு, கெட் அவுட் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை!''
கோவையில், சாலையில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் மோதி, பொறியாளர் ரகுபதி என்பவர் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில், சமூக வலைதள நேயர்களிடம், "சாதாரண சாலை விபத்துகள் அரசியலாக்கப்படுகிறதா? உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதிமீறல்கள் உதாசீனப்படுத்தப்படுகிறதா?" என்று கேட்டிருந்தோம். இது குறித்த நேயர்களின் கருத்துக்களை தொகுத்து வழங்குகிறோம்.
"அரசு முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும்" என்கிறார் மணிவேல் மணியன்.
"நீதிமன்றம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்" என்கிறார் சேகர் பர்னாபாஸ் என்ற நேயர்.
''மக்கள் பணத்தில் அமைத்த சாலையை சேதப்படுத்த யார் அதிகாரம் கொடுத்தது.?'' என கேட்டுள்ளார் முருகு சுப்ரா.
'' மாநகராட்சி ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். முதலில் அரசு அதிகாரிகள் விதிகளை பின்பற்ற வேண்டும்'' என சதிஷ் பதிவிட்டுள்ளார்.
"நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடம்- சாலை விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளில். ஏன் என்று இப்போது விளங்குகிறதா? கட்சிகளின் சார்பில் கட் அவுட், அதிகாரிகள் சார்பில் கடமையாற்றாமல் இருத்தல்... நல்ல ஊக்குவிப்பு" என்று கூறி்யுள்ளார் விவேகானந்தன் சங்கரன்.
"நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தும் பாத சாரிகளுக்கு உயிராபத்தை கொடுக்கின்ற இந்த அரசு இல்லை வேறு எந்த அரசாக இருந்தாலும் விதி மீறலாகத் தான் எடுத்துக்கொள்ளவேண்டும்........!" என்று கூறியுள்ளார் யோகா கண்ணன்.
"சட்டம் சாமான்ய மக்களுக்கு தான், அதிகார வர்க்கத்திற்கு இல்லை என்பதை தெளிவாக காட்டியுள்ளனர். ஆட்சியை கலைத்தால் போதும்" என்று பதிவிட்டுள்ளார் பழனி வெங்கட்.
"சட்டத்தை அரசியல்வாதிகள் மதிக்காதப்போது ,சாதரண மக்கள் எப்படி மதிப்பார்கள்,கட்டுப்பாடுடன் நடக்க வேண்டிய அரசுகள் கட் அவுட்டை வைத்து ஆட்சி செய்கிறார்கள் , கட் அவுட்"அரசுக்கு ,கெட் அவுட்சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை!!" என்று பதிவிட்டுள்ளார் புலிவலம் பாஷா பாஷா.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்