You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அறுவை சிகிச்சைக்கு பிறகு கண் திறந்த `தலையொட்டி பிறந்த` குழந்தை
தலையொட்டி பிறந்து, அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்ட இரட்டை ஆண் குழந்தைகளில், ஒரு குழந்தை அறுவை சிகிச்சை முடிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு கண் திறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயதாகும் ஜகா, கைகளை அசைக்குமாறு கூறிய போது, அதை செய்துள்ளார். சுவாசக்குழாய் உதவியுடனேயே இன்னும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுநீரக பிரச்சனை உள்ளதால், அவருக்கு தினமும் டையாலிஸிஸ் செய்ய வேண்டிய தேவை உள்ளது.
அவரின் சகோதரரான கலியா இன்னும் சுயநினைவை அடையவில்லை. மேலும், அவர் வலிப்புகளாலும் அவதிப்பட்டார்.
பகிர்ந்துகொள்ளப்பட்ட ரத்தக் குழாய்கள் மற்றும் மூளை துசுக்களுடன் பிறந்த இந்த இரட்டை குழந்தைகள் 16 மணிநேர சிகிச்சைக்குப் பிறகு பிரிக்கப்பட்டனர்.
இந்தியாவில் இதற்கு முன்பு நடந்திராத இத்தகைய அறுவை சிகிச்சை, டெல்லி அரசு மருத்துவமனையில், 30 பேர் கொண்ட மருத்துவ குழுவால் நடத்தப்பட்டது.
இரு குழந்தைகளின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், அவர்களின் முன்னேற்றம் மருத்துவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், அந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற பேராசிரியர் தீபக் குப்தா, பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த குழந்தைகள், ஒரிசா மாநிலத்தின் கிழக்கு பகுதியை சேர்ந்தவர்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பாகவே தங்களுக்கு முன்பு இருந்த பல சாத்தியமற்ற நிலைகளை இந்தக் குழந்தைகள் முறியடித்தனர்.
கரானியோபகஸ் என்று அழைக்கப்படும், `தலையொட்டி பிறக்கும்` நிலை என்பது முப்பது லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படக்கூடியது.
மேலும், இத்தகைய நிலையில் பிறப்பவர்களில் 50 சதவிகிதம் பேர் 24 மனிநேரத்தில் இறப்பார்கள் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, மூளையில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தை கொண்டுசெல்லும், பொதுவாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டிருந்த நரம்புகளை பிரித்து மாற்று வழி அமைப்பதற்காக முதல் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :