You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி: பொழுதுபோக்கு துறையை வளர்க்கும் நிறுவனம் 2.5 பில்லியன் டாலர் முதலீடு
செளதி அரேபியாவின் அரசுத்துறை முதலீட்டு நிறுவனம், நாட்டின் பொழுதுபோக்கு துறையை வளர்க்கும் நோக்கில் ஒரு நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
அந்த நிறுவனத்துக்கு 2.5 பில்லியன் டாலர்கள் வழங்கப்படும். ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உண்டாக்கும் வகையில் அதன் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஆழமான பழமைவாத செளதி அரசு தனது பிரஜைகளுக்கு மேலும் சிறிது கேளிக்கை வழங்க இடமளிக்க முடிவு செய்திருக்கும் இத்தருணத்தில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சவுதி அரேபியாவில் திரையரங்குகளுக்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லையென்றாலும், சமீபகாலங்களில் சில கச்சேரிகள் மற்றும் திரையிடல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதம் செளதியின் செங்கடற்பரப்பில் உள்ள தீவுகளில் சொகுசு விடுதிகள் கட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்
- நான்கு மாதத்திற்குப் பிறகு மே 17 அமைப்பினர் விடுதலை
- சென்னை உயர்நீதிமன்றத்தில் குவிந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்
- 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கில் சிறுமியின் இன்னொரு மாமா கைது
- இலங்கை: அனுமதியின்றி யானைக்குட்டி வைத்திருந்த முன்னாள் எம்.பி. மீது விசாரணைக்கு அனுமதி
- ''ரோஹிஞ்சா அகதிகளை திரும்ப அனுப்பும் இந்திய முயற்சி மனித உரிமை மீறல்''
- செக்ஸ் பொம்மை வாடகை சேவையை சீன நிறுவனம் நிறுத்தியது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்