கேஸினோவில் சூதாடும் ரஜினி : சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடும் தாக்கு

பட மூலாதாரம், @Swamy39
நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0, ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்களில் நடித்துவரும் ரஜினிகாந்த், தற்போது அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார்.
காலா படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
உடல்நலம் குறித்த பரிசோதனைக்காக அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க கேஸினோ ஒன்றில் ரஜினி அமர்ந்திருப்பதைப் போன்ற படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.

பட மூலாதாரம், twitter
அந்தப் படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சுப்பிரமணியன் சுவாமி, "உடல் நலத்தை மேம்படுத்த அமெரிக்க கேஸினோவில் ரஜினி சூதாடுகிறார். இவருக்கு அதற்கான டாலர்கள் எங்கிருந்து வந்தன என்பதை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்" என பதிவிட்டிருக்கிறார்.
ரஜினியை தொடர்ந்து ஆர்கே 420 என்றே குறிப்பிட்டுவரும் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினி அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












