கடலிலிருந்து மலை வரை வீசும் யோகா அலை

சர்வதேச யோகா தினத்தில் இந்திய கடற்படையினர் கப்பலில் யோகா செய்த படங்கள் டிவிட்டர் தளத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்திய பெருங்கடலில் ஐ என் எஸ் ஷிவாலிக், காமார்டா கப்பல்கள் மிதக்க, அவற்றில் கடற்படையின் அதிகாரிகள் விதவிதமான ஆசனங்களை செய்யும் புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் கடற்படையின் அதிகாரபூர்வ டிவிட்டார் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல நகரங்களில், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பூங்காக்கள் ஆகிய இடங்களில் இன்று சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் வகையில் பலர் இணைந்து யோகா பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

லடாக்கில் 14400 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரியின் கரையில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் , பிரதமர் மோதி பங்கேற்ற யோகா நிகழ்ச்சியின் போது தொடக்கத்தில் மழை பெய்ததால், அந்த நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டது. அந்த சமயத்தில் பங்கேற்பாளர்கள், யோகா பயிற்சி செய்வதற்கான பாய்களை உயர்த்தி கொடைகளாக பயன்படுத்திய காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின.

யோகா தினத்தில் பேசிய பிரதமர் மோதி, கடந்த மூன்று ஆண்டுகளில் பல யோகா நிறுவனங்கள் பெருகிவருவதை பார்க்கமுடிகிறது என்றும் யோகா ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது என்றார்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்