You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீபா-தீபக் பிரச்சனை: வரிந்து கட்டியும், வாரிக் கொட்டியும் டிவிட்டர்வாசிகள் அமளி
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென சென்னை போயஸ் தோட்ட இல்லத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும், தீபாவுக்கும் அவரது சகோதரர் தீபக்குக்கும் வாக்குவாதம் உண்டானதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், நேற்றும், இன்றும் (திங்கள்கிழமை) சமூகவலைத்தளமான டிவிட்டரில் #தீபா மற்றும் #Deepak ஆகிய ஹேஸ்டேக்கள் சென்னை டிரெண்ட்டில் டிரண்டிங்கில் இருந்தன.
நேற்றைய சம்பவங்கள் குறித்து பிரதமர் மோதியிடம் முறையிடுவேன் என்று தீபா தெரிவித்ததாக செய்தி வெளியானதை தொடர்ந்து, அது குறித்து டிவிட்டர்வாசிகள் நகைச்சுவையாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதே வேளையில், தீபாவை ஆதரித்தும், முன்னிறுத்தியும் சில டிவிட்டர் பதிவுகள் வெளிவந்துள்ளன.
வரலாறு திரும்புகிறது என தீபாவையும் , ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு சிலர் டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளனர்
தொடர்பான செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்