82 வயதில் சிறையில் இருந்தபடியே, 12ம் வகுப்பு `பாஸ்` செய்தார் சௌதாலா

ஹரியானா மாநிலத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சௌதாலா தனது 82ம் வயதில் பனிரெண்டாம் வகுப்பு பரீட்சையில் தேர்வு பெற்றுள்ளார்.

டெல்லியில் உள்ள திஹார் சிறையில் இருக்கும் தனது தந்தை சிறை தண்டனை காலத்தை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளார் என்று ஓம் பிரகாஷ் சௌதாலாவின் மகன் அபெய் சௌத்தாலா தெரிவித்தார்.

ஆசிரியர்களை பணியமர்த்துவதில் தவறு இழைத்ததற்காக 2013ல் ஓம் பிரகாஷ் சௌதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய அபெய் சௌதாலா தனது தந்தை ''தினமும் சிறையில் உள்ள நூலகத்திற்கு செல்வதாக'' குறிப்பிட்டார்.

''அவர் செய்தித் தாள்கள் மற்றும் புத்தகங்களை வசிக்கிறார். அவருக்கு பிரியமான புத்தகங்களை அடுக்கி வைக்குமாறு கூறுகிறார். உலகம் முழுவதும் உள்ள சிறந்த அரசியல் தலைவர்கள் பற்றி அவர் படிக்கிறார்,'' என்று அபெய் சௌதாலா கூறினார்.

போலியான ஆவணங்களை கொண்டு 1999 மற்றும் 2000ம் ஆண்டுகளில், 3,206 ஆசிரியர்களை பணியில் அமர்த்தியதற்காக, ஓம் பிரகாஷ் சௌதாலா மற்றும் 54 நபர்கள் தண்டிக்கப்பட்டனர்.

திறன்மிகுந்த நபர்கள் நிராகரிப்பட்டு, லஞ்சம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்திய தேசிய லோக் தளக் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சௌத்தாலா முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் மகன் ஆவார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்