தில்லியில் டி.டி.வி. தினகரன் கைது; என்ன சொல்கிறார்கள் அரசியல் பிரபலங்கள்?

நேற்று நள்ளிரவு (செவ்வாய்க்கிழமை) புது தில்லியில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருடைய கைது குறித்து சமூக வலைத்தளத்தமான ட்விட்டரில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார் - தமிழிசை செளந்தராஜன்

''தினகரன் லஞ்சப்பணத்தை சன்மானமாக கொடுத்து தன்மானத்தை இழந்து தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார். பா.ஜ.க ஆட்சியில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது'' - பா.ஜ.கவின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தராஜன்.

யார் அந்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ? - ஜோதிமணி

''இறுதியாக டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டுவிட்டார்?. இவர்கள் லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக கூறப்படும் தேர்தல் கமிஷன் அதிகாரி யார்? ஏன் அது மட்டும் ஏன் ரகசியமாக இருக்கிறது?'' - காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி.

ஆர்.எஸ்.எஸ் என்பதால் காக்கப்படுகிறாரா? - ஜெ. அன்பழகன்

''தேர்தல் ஆணையத்தில் பணிபுரிந்து டி.டி.வி தினகரன் & கோவிடம் லஞ்சம் வாங்கிக் கொள்வதாக கூறிய அந்த அதிகாரி யார் ? ஆர்.எஸ்.எஸ் என்பதால் காக்கப்படுகிறாரா ? '' - தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்.

ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டான மன்னார்குடி

அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ட்விட்டரில் மன்னார்குடி என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் பிரபலமானது. ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் இந்த ஹேஷ் டேக்கை பயன்படுத்தி தங்கள் கருத்துக்களை பதிந்தனர். அதில் சிலவற்றை இங்கே வழங்கியுள்ளோம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்