இது வைரல்: ஆஸி பிரதமர் - நரேந்திர மோதியின் `உரு மாறிய' செல்ஃபி

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆகிய இருவரும் சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்தபோது, எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தோடு தொடர்புபடுத்தி, திருத்தப்பட்டு, அவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் மூன்றுநாள் அரசு முறைப்பயணமாக கடந்த 10 ஆம் தேதி இந்தியா வந்தார். தில்லி மெட்ரோவில் பயணித்த அவர், இந்திய பிரதமர் மோதியுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர். தற்போது, அந்த புகைப்படத்தின் திருத்தப்பட்ட படம் சமூக ஊடகங்களான வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

தில்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளின் போராட்டம் 30-ஆவது நாளை தொட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்குமுன், பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே ஆடைகளை களைந்து சாலையில் உருண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்புபடுத்தி, இந்தப் படங்கள் புனையப்பட்டுள்ளன.

தற்போது, இருநாட்டு பிரதமர்கள் எடுத்துகொண்ட செல்ஃபியின் பின்னணியில் தமிழக விவசாயிகள் பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே நடத்திய நிர்வாண போராட்டத்தின் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், உண்மையான புகைப்படம் எது என்பதும் இங்கு வெளியாகியுள்ளது. அதில், ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் காத்திருக்கும் பயணிகளுக்கு இருநாட்டுப் பிரதமர்களும் கையசைக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்