நம்பிக்கை வாக்கெடுப்பும், கட்சி தாவல் தடை சட்டமும் ; 10 முக்கியத் தகவல்கள்
தமிழக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்தால் அவர்கள் பதவி இழக்க நேருமா ?

பட மூலாதாரம், Getty Images
சட்டம் என்ன சொல்கிறது?
- 1985ல் உருவாகி, 2003ல் திருத்தப்பட்டது கட்சித் தாவல் தடை சட்டம்
- கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக விலகினால் பதவி பறிபோகும்
- கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் பதவி பறிபோகும்
- சட்டமன்ற / நாடாளுமன்றக் கட்சி உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைந்தால் பதவி தப்பும்
- ரகசிய வாக்கெடுப்பா, வெளிப்படையான வாக்கெடுப்பா என்பது சபாநாயகரின் முடிவு
- சபாநாயகரின் முடிவு இறுதியானது - ஆனால் நீதிமன்றங்கள் சில சந்தர்ப்பங்களில் மறுபரீசலனை செய்யலாம்
- அவையில் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தாலும், வாக்கு செல்லும்.
- கொறடாவின் உத்தரவை மீறிய உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமுன் நோட்டிஸ் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
- மீறிய உறுப்பினர்களை சபாநாயகர் மன்னிக்கவும் வழிவகை உண்டு.
- கட்சியிலிருந்து விலக்கப்பட்ட உறுப்பினர்களை கொறடா கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு விடையில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்








