You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் போது சென்னையில் என்ன நடந்தது? புகைப்படங்களில்
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின் வெளியாகும் போது சென்னையில் பல இடங்களில் நடந்த நிகழ்வுகள் குறித்த புகைப்பட பதிவு.
கடந்த ஒரு வார காலமாகவே முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு பொது மக்களுக்கும், அதிமுக தொண்டர்களும் அவரை பார்க்கவும், படங்கள் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை காலை முதலே அதிக அளவில் மக்கள் குவிய தொடங்கினர். தீர்ப்பு வெளியாகும் போது அங்கு பெண்களும் கூடியிருந்தனர்.
முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் இல்லத்தின் முன் குவிந்த அதிமுக தொண்டர்கள் தீர்ப்பை வரவேற்பதாக முழக்கமிட்டனர்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் இல்லத்தில் தான் சசிகலா வசித்து வந்தார். போயஸ் இல்லம் அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தீர்ப்பு சசிகலாவிற்கு ஆதரவாக வந்தால், கொண்டாட்டங்கள் நிகழும் வாய்ப்பு இருந்தது. தீர்ப்புக்கு பிறகு, அமைதியானது போயஸ் இல்லம் சாலை.
தீர்ப்பு வெளியாகும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதை தடுக்க காவல் துறையினர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் முன் குவிக்கப்பட்டனர்.
அதிமுக தொண்டர்கள் சிலர் அலுவலக முற்றத்தில் அமர்ந்திருந்தனர்.
சொத்துகுவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான போது திமுக தொண்டர்கள் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் அருகில் குவிய தொடங்கினர்.
சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் சசிகலா குற்றவாளி என்ற தீர்ப்பு வெளியாகிய பிறகு என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபாவின் ஆதரவாளர்கள் தீர்ப்புக்கு பிறகு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
தீபாவின் ஆதரவாளர்கள், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு தீபா தான் என்று கோஷமிட்டனர். பட்டாசு வெடித்து கொண்டாடினர் .
தீர்ப்புக்கு பிறகு, சசிகலா மற்றும் அவரது ஆதரவு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள கூவத்தூர் தனியார் விடுதிக்கு ஏராளமான காவல் துறையினர் வந்துசேர்ந்தனர்.