You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பான் விளம்பர பாண்ட் - சர்ச்சையில் பியெர்ஸ் ப்ரொஸ்னன்
அடிமையாக்கும் சுவை கொண்டதாகவும் , ஆபத்தானதாகவும் பலரால் கருதப்படுகின்ற, மெல்லுகின்ற புகையிலைப் பொருள் ஒன்றுடன் தொடர்பு படுத்தப்படும் பொருள் ஒன்றை வாங்கஊக்குவிக்கும் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் , பிரபல முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் 007 நட்சத்திரமான பியெர்ஸ் ப்ரொஸ்னன் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்.
நவநாகரிக மற்றும் அமைதியான ஜேம்ஸ் பாண்ட் மற்றும் தென் இந்திய படங்களில் ஹீரோக்கள் மொத்த வில்லன்கள் கூட்டத்தையும் வெறும் பார்வையின் மூலம் வீழ்த்தும் அதீத சண்டைக் காட்சிகள் கொண்ட ஒரு கலவை இந்த விளம்பரம்.
ஆயுதம் எதுவுமின்றி வெறும் பான் பஹார் என்ற வாய் புத்துணர்ச்சி பாட்டிலுடன், பியெர்ஸ் பிராஸ்னன் மொத்த குழுவையும் வீழ்த்த தயாராகிறார். பாண்ட் நடுநடுவே தன் கையில் உள்ள பான் பஹார் டப்பிக்கு முத்தம் கொடுக்கிறார். இந்த 60 நொடி விளம்பரம் குறும்படம் போல இருக்கிறது. இதில் குண்டர்கள், ஒரு பார்ட்டி, ஒரு பெண் உளவாளி மற்றும் ஒரு கொடூரமான வில்லனுடன் மோதல் என பல அம்சங்கள் இருக்கின்றன.
இந்த விளம்பரம் இந்தியாவில் நேர்மறையான எதிர்வினைகளை ஏற்படுத்தி உள்ளன.
பிற சேர்வைகளோடு புகையிலை, சிதைக்கப்பட்ட பாக்கு, சுண்ணாம்பு மற்றும் கிராம்பை, சரியான விகித்த்தில் கலந்த பான் மசாலா மற்றும் குட்காவோடு, இந்த பான் பஹாரை பலரும் தொடர்புபடுத்தி பார்த்திருக்கின்றனர். இது மில்லியன் கணக்கான மக்களால் மெல்லப்படுகிறது. அதன் மிதமான மனோவியல் விளைவுகளுக்கு அவர்கள் அடிமையாகி விடுகின்றனர்.
வாய் புற்றுநோய் மற்றும் கட்டிகள் என தீவிரமான நோய்களோடு தொடர்புடையதால் பான் மசாலா மற்றும் குட்கா இரண்டும் தென் ஆசியாவில் அழிவை ஏற்படுத்தும் விஷயங்களாக வர்ணிக்கப்படுகின்றன.
இந்தியாவின் பல மாநிலங்களில் பான் மசாலா மற்றும் குட்கா போன்ற தயாரிப்புகளின் வெளிப்படையான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பல மாநில அரசுகளும், இது போன்ற தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்க கூடாது என்பதற்காக தொடர் பிரச்சாரங்களை நடத்தி வருகின்றன.
ஆனால், பியெர்ஸ் ப்ரொஸ்னன் விளம்பரப்படுத்தும் தயாரிப்பு பான் மசாலாவோ அல்லது குட்காவோ அல்ல. அதனால், இந்த விளம்பரத்தால் ஏற்பட்ட எதிர்வினைகள் கோபம் மற்றும் ஏமாற்றம் இந்த இரண்டிற்கும் இடையே ஆனதாக அமைந்துள்ளது.
எனினும், பான் பஹார் தயாரிப்பாளரான அசோக் & கோ நிறுவனம், பொதுவெளியில் நிலவி உள்ள தவறான கருத்தின் காரணமாக பொதுமக்களிடையே இந்த சீற்றம் ஏற்பட்டுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
''இந்தியாவிலே வாய் புத்துணர்ச்சி தயாரிப்புகளை தயாரிக்கும் மிக பழமையான பிராண்ட் நாங்கள் தான். குட்காவையோ அல்லது பான் மசாலாவையோ நாங்கள் தயாரிப்பதில்லை. ஆனால், 1990க்கு பிறகு, சந்தையில் குட்கா நிரம்பி வழிந்த போது, வாய் புத்துணர்ச்சித் தயாரிப்புகளுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தியது'' என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
''எங்களுடைய தயாரிப்பை விளம்பரப்படுத்த பியெர்ஸ் பிராஸ்னன் தான் பொருத்தமாக இருப்பார் என்று நிறுவனம் விரும்பியது. காரணம், அவர் இனிமையான, கூலான மற்றும் திறமைசாலியான நபர். பான் பஹாருடன் மக்கள் இணைத்துப் பார்க்க அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது'' என்றார் அவர்.
இந்த விளம்பரம் ஏற்படுத்திய எதிர்வினைகள், அசோக் & கோ நிறுவனத்திற்கு பல கஷ்டமான பணிகள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.