அமெரிக்க ஊடகங்கள் மீது இணைய வழி தாக்குதல்
அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் உட்பட பல ஊடக நிறுவனங்கள் மீது தொடர்ந்து இணைய வழி தாக்குதலை ஹேக்கர்கள் நடத்தியிருப்பதாக வெளியான செய்திகளை விசாரணை செய்து வருவதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு, எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், PA
ரஷ்யாவின் உளவு அமைப்புக்கள் மற்றும் ஹேக்கர்களுக்கு இடையில் இருக்கும் தொடர்பு பற்றிய சந்தேகங்களை துப்பறிவாளர்கள் விசாரித்து வருகின்றனர் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இணைய வழி தாக்குதல்தாரிகள் தனிப்பட்ட நிருபர்களை இலக்கு வைக்க நினைத்திருக்கலாம் என்றும் நியூயார்க் டைம்ஸ் ஊடகத்தின் செய்தி தொடர்பாளர் தங்களது ஊடக குழுகளின் உள் அமைப்புகள் எதுவும் சமரசம் செய்யபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பி பிசி செய்தியாளர், இந்த இணைய தாக்குதல்தாரிகள்தான் பல வாரங்களுக்கு முன்பு நடந்த ஜனநாயகக் கட்சியின் தரவுத் தளங்களை சேதப்படுத்தியதற்கு பின்புலனாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது என்றும் சில நிபுணர்கள் இந்த இணைய வழி தாக்குதலுக்கு ரஷ்யாவின் உளவு அமைப்புக்களே காரணம் என்று எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளார்.








