You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி உரை: ஒமிக்ரான், கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி பேசிய 10 முக்கிய தகவல்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தொலைக்காட்சி வாயிலாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். கொரோனா தடுப்பூசியை 15 வயதை கடந்தவர்களுக்கு செலுத்துவது, ஒமிக்ரான் திரிபு உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.
நரேந்திர மோதி உரையின் 10 முக்கிய தகவல்கள் இங்கே.
- கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு குறித்து இந்திய மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
- தடுப்பூசி போட தகுதியான வயதுள்ளவர்கள் 61% பேருக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
- மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்து விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
- 2022 ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்த வழங்கும் பணி தொடங்கும்.
- உலகம் முழுக்க ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. நாம் பதற்றப்படாமல் விழிப்புடன், முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவதை தொடர வேண்டும்.
- 18 லட்சம் படுக்கைகள், 5 லட்சம் ஆக்சிஜன் படுக்கைகள், 11.4 லட்சம் ஐசியு படுக்கைகள், 3000க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் ஆலைகள் இயக்கத்தில் உள்ளன.
- 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் நாடு முழுக்க விநியோகிக்கப்பட்டுள்ளன.
- கோவிட் 19 தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு இந்தியா முழுக்க 141 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- இணை நோய் உள்ளவர்களுக்கும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும். (பூஸ்டர் டோஸ் என்று நரேந்திர மோதி குறிப்பிடவில்லை)
- 60 வயதை கடந்தவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் இந்த முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தப்படும்.
பிற செய்திகள்:
- ஜேம்ஸ் வெப்: உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது
- இலங்கை திருக்கோவில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி: என்ன நடந்தது?
- தமிழ் டெக் யூடியூபர்: '10 பேர் பார்த்தால் போதுமென நினைத்தேன். இன்று 30 லட்சம் பேர் பார்க்கிறார்கள்'
- உத்தராகண்ட்: தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த ஆதிக்க சாதி மாணவர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்