அமெரிக்காவை அதிர வைத்த இருட்டுலக ஹேக்கர்கள் - கோடியில் பரிசு அறிவித்த அரசு
டார்க்சைடு இணையவழித் தாக்குதலாளிகள் குழுவின் ரேன்சம்வேர் தாக்குதலில் பங்கேற்பதற்காக சதித்திட்டம் தீட்டிய யாரையாவது கைது செய்ய உதவும் தகவல்களைத் தெரிவித்தால் அவர்களுக்கு கூடுதலாக 50 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 38 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்தக் குழு நடத்திய இணையவழி தாக்குதலால் கோஸ்டல் பைப்லைன் எனும் எரிபொருள் நிறுவனத்தின் செயல்பாடுகள் பல நாட்கள் நிறுத்தப்பட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை உண்டானது.
தாங்கள் இணையவழித் தாக்குதலுக்கு உண்டான பின்பு இந்த நிறுவனம் தாக்குதல்களுக்கு ஹேக்கர்களுக்கு 44 லட்சம் அமெரிக்க டாலரை பிட்காயின் வடிவில் பிணைத் தொகையாக வழங்கியது. இதில் பெரும் தொகை மீண்டும் மீட்கப்பட்டது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
டார்க்சைடு தாக்குதலாளிகள் தங்களால் பாதிக்கப்பட்ட 47 வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து குறைந்தது 90 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் 67 கோடி இந்திய ரூபாய்) பணத்தை பிணைத் தொகையாகப் பெற்றுள்ளனர் என்று பிட்காயின் பகுப்பாய்வு நிறுவனமான எலிப்டிக் தெரிவிக்கிறது.
இந்த ஹேக்கர்களை பிடிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த தகவல்களை வழங்குகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்