தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ரஜினியை விசாரிக்க வாய்ப்பு: ஆணைய வழக்கறிஞர்

பட மூலாதாரம், Getty Images
(பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்வுகளில் முக்கியமானவற்றை இந்த பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை கிட்டத்தட்ட 22 விசாரணைகள் நடந்துள்ள நிலையில், கடந்த 6 மாத காலமாக கொரோனா காரணமாக விசாரணை நடைபெறவில்லை. தற்போது மீண்டும் 23 வது கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி சூட்டின்போது தூத்துக்குடி வந்த நடிகர் ரஜினிகாந்த, போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று அங்கு பேட்டி அளித்திருந்தார். அது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்த் அதற்கு ஆஜராகாமல் அவர் தரப்பிலிருந்து விளக்கம் மட்டும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "இதுவரை கொரோனா ஊரடங்கு காரணத்தினால் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படாமல் இருந்தது. இப்போது அவர் படப்பிடிப்புக்கு செல்லத்தொடங்கியுள்ளார். எனவே, வரும் ஜனவரி மாதத்துக்குள் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்ப வாய்புள்ளது. சம்மன் அனுப்பி அவர் விசாரணை ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்" என்று கூறினார்.
"23ஆம் கட்ட விசாரணைக்கு 49 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 42 பேர் ஆஜராகி உள்ளனர். மேலும் இதுவரை மொத்தமாக 865 பேருக்கு சம்மன் அனுப்பி 586 பேர் விசாரிக்கபட்டுள்ளனர். மேலும் 775 ஆவணங்கள் சேகரிக்கபட்டுள்ளன," என்று வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார்.
கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த வாக்காளர்கள்

பட மூலாதாரம், Getty Images
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு முன்பைக் காட்டிலும் அதிக வாக்குகளை பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தொடர்ந்து இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் ஊழல், வகுப்புவாத மற்றும் பாசாங்குத்தனமான ஆட்சியை பாஜக வெளிகாட்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கேரள உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.
941 கிராம பஞ்சாயத்துக்கான இடங்களில் 514 இடங்களில் அக்கட்சி இடதுசாரி முன்னணிக்கு அதிக இடம் கிடைத்திருப்பது மக்களின் வெற்றி என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முந்தைய தேர்தல்களைக்காட்டிலும் பாஜக இந்த தேர்தலில் சிறிது முன்னேற்றம் கண்டுள்ளது. அதற்கு சபரிமலை பிரச்னை காரணமாக நம்பப்படுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி பாஜக கிராம பஞ்சாயத்திற்கான இடங்களில் 24 இடங்களில் முன்னேற்ற நிலையில் இருந்தது. 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது அக்கட்சி வெறும் 14 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது.
கேரள உள்ளாட்சி தேர்தல்கள் அடுத்த வருடம் ஏப்ரல் மே மாதத்த்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
இந்த தேர்தல் வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரன், "நரேந்திர மோதியின் நலத் திட்டங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவு. முந்தைய தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களில் வென்றது. இப்போது அக்கட்சி 8 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இனி இங்கு பாஜகவுக்கும் இடதுசாரிக்கும் இடையேதான் போட்டி," என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
இதேவேளை ஆளும் முதல்வர் பினராயி விஜயன், "உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஆளும் கட்சி பெற்றுள்ளது. கேரளாவை அழிக்க முற்பட்டவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியிருக்கிறார்கள்," என்று கூறினார்.
பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று - தொடர்ந்து பணிகளை கவனிப்பார் என தகவல்

பட மூலாதாரம், EPA
பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்குக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிபரின் எலிஸீ மாளிகை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் ஏழு நாட்களுக்கு அதிபர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொள்வார் என்றும் அதே சமயம் அவர் தமது பொறுப்புகளை வழக்கம் போல ஆற்றுவார் என்றும் அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரான்ஸில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இந்த வாரம் தொடங்கி இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டது.
பிரான்ஸில் இதுவரை 20 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தொடங்கியது முதல் அங்கு இதுவரை 59,400 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுத்தரவுகள் கூறுகின்றன.

முன்னதாக, அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வியாழக்கிழமை காலையில் அதிபருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
எமானுவேல் மக்ரோங்குக்கு எப்படி, யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பது தெரியவில்லை. இதேவேளை, கடந்த சில நாட்களாக அதிபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள் :
- "பிக்பாஸ் கமல்ஹாசனின் தொடரை பார்த்தால் குடும்பம் காலி" - கடுமையாகச் சாடிய தமிழக முதல்வர்
- ஏர் இந்தியாவை ஊழியர்கள் வாங்கப் போகிறார்களா?
- 180 கோடி நட்சத்திரங்களை எண்ணி முடித்த விண்வெளி தொலை நோக்கி
- வாடகை பாக்கி: லதா ரஜினிகாந்த் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு
- விண்வெளியில் 'பாங்கு' சொல்லும் ஒலி: நீல் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாம் மதத்துக்கு மாறினாரா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












