You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
MI Vs KKR: ஏமாற்றிய தினேஷ் கார்த்திக்; ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி – முதலிடத்திற்கு முன்னேற்றம்
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 32ஆவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அணியில் டாம் பேண்டன் மற்றும் நாகர்கோட்டிக்கு பதிலாக கிறிஸ் க்ரீன் மற்றும் ஷிவம் சேர்க்கப்பட்டிருந்தனர்.
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் பெரிதாக கைகொடுக்கவில்லை.
மும்பை அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.
மும்பை அணியின் பந்துவீச்சில் கொல்கத்தா அணியின் ராகுல் திரிப்பாதி, ராணா, ரசல் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிதாக ரன்களை சேர்க்கவில்லை. சுப்மன் கில் 23 ரன்களை எடுத்தார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார்.
எனவே அவரின் ஆட்டம் நேற்று பெரிதாகக் கவனிக்கப்பட்டது ஆனால் நேற்றைய போட்டியில் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் அவர் அவுட் ஆனார். இருப்பினும் கேப்டன் மோர்கன் மற்றும் கம்மின்ஸ் இருவரும் இணைந்து அணியின் ரன்களை அதிகரிக்கச் செய்தனர். கம்மின்ஸ் அரை சதம் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா இருபது ஓவர்கள் முடிவில் 148 ரன்களை எடுத்தது.
இருப்பினும் கொல்கத்தா அணி தொடர்ந்து இரண்டாவது போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.
இதற்கு முந்தைய போட்டியில் கொல்கத்தா அணியை ராயல் சேலஞ்சர்ஸ் அணி, அதிகபட்சமாக 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கொல்கத்தா அணியால் வெறும் 112 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்திலேயே நிலைத்து ஆடிய மும்பையின் பேட்ஸ்மேன்கள்
149 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் முதல் ஐந்து ஓவர்களில் 48 ரன்களை எடுத்தனர்.
பவர் ப்ளேயின் இறுதி ஓவர்களில் அவர்கள் 50 ரன்களை கடந்துவிட்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தமாக இரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது. ரோஹித் ஷர்மா 35 ரன்களை எடுத்தார்.
குவிண்டன் டி காக் வெறும் 25 பந்துகளில் அரை சதம் கண்டார்.
அவர் ஆட்டமிழக்காமல் 78 ரன்களை எடுத்தார் இறுதியில் மும்பை அணி இரு விக்கெட்டுகளை இழந்து 19 பந்துகள் மீதம் இருந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 149 ரன்களை சேகரித்தது.
நேற்றைய வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் தர வரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
முத்தையா முரளிதரன்: "இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?"
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் "800" திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை முத்தையா முரளிதரன் அளித்துள்ளார்.
இது தொடர்பாக துபையில் இருந்து மூன்று பக்க அறிக்கை, முத்தையா முரளிதன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
"என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன். பிறகு முத்தையா முரளிதனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்."
விரிவாக படிக்க:முத்தையா முரளிதரன்: "இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?"
வேலூரில் லஞ்சம் வாங்க வாடகைக்கு வீடு எடுத்த அதிகாரி
வேலூர் மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் சுமார் ரூ. 3.25 கோடி ரொக்கம், மூன்றரை கிலோ தங்கம், ஆறரை கிலோ வெள்ளி நகைகள் மற்றும் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம் காட்பாடியில், மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பன்னீர்செல்வம் (வயது 51) என்பவர் வேலூர் மண்டல இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார். மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் அருகே காந்தி நகரில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்த இவர், அந்த வீட்டை அலுவலக பணிக்காக பயன்படுத்தியாக கூறப்படுகிறது. இவரது கட்டுப்பாட்டில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் இருக்கின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: