You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"டாஸ்மானியா பேய்கள்": 3000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய காட்டுக்குள் விடப்பட்ட பாலூட்டி விலங்கினம்
3,000 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய பெருநிலப்பரப்பில் டாஸ்மானியாவின் பேய்கள் மீண்டும் விடப்பட்டுள்ளன.
இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்கு பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 26 பாலூட்டிகளை விடுவித்துள்ளனர்.
டாஸ்மானியாவின் பேய்கள் என்று அழைக்கப்படும் இந்த விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு விலங்கினம்.
இது எழுப்பும் அதீத ஒலிதான் இந்த விலங்கிற்கு இந்த பெயர் வந்ததற்கான காரணம்.
மேலும் இந்த விலங்கு, விலங்குகளின் சடலங்களை வெறித்தனமாக தேடிச் சென்று, கடித்து நொறுக்கிவிடும். தனது தாடைகளின் சக்தியை கொண்டு எலும்புகளை தூள்தூளாக நொறுக்கும் வல்லமை கொண்டது.
இருப்பினும் இந்த விலங்கு மனிதகுலத்துக்கோ அல்லது விவசாயத்திற்கோ எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்துவதில்லை என வன உயிர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த விலங்குகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு வடக்கில் இருக்கும் பாரிங்டன் டாப்ஸ் தேசிய பூங்காவில் விலங்குகள் நல பாதுகாப்பு குழுக்களால் விடப்பட்டுள்ளன.
முதன்முதலில் மார்ச் மாதம் சுமார் 15 விலங்குகள் இந்த பூங்காவிற்குள் விடப்பட்டன. அவை தற்போது சூழலோடு ஒத்துப்போவதை கண்ட வன உயிர் பாதுகாப்பு குழுக்கள், தற்போது மேலும் 11 விலங்குகளை பூங்காவிற்கு கொண்டு வந்துள்ளன.
அடுத்த இரு வருடங்களில் மேலும் 40 விலங்குகளை பூங்காவிற்குள் விட திட்டமிட்டுள்ளனர்.
இந்த விலங்குகள் கண்காணிப்படும் என்றும், ஆனால் தொடர்ந்து எண்ணிக்கையை பெருக்குவது அந்த விலங்கை பொருத்தது என விலங்கை பூங்காவிற்கு விடும் பணியை மேற்கொண்ட ஆசி ஆர்க் குழுவின் தலைவர் தெரிவிக்கிறார்.
இந்த பூங்கா சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இங்கு விடப்பட்டுள்ளன.
தற்போது டாஸ்மானியாவின் காடுகளில் சுமார் 25,000 வரையான விலங்குகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளனர். ஆனால் 1990ஆம் ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விலங்குகள் வரை வாழ்ந்தன. இந்த விலங்குகளை தாக்கிய கொடிய வாய் புற்றுநோயால் இவை பெருமளவில் அழிந்து விட்டன.
பிற செய்திகள்:
- தீவிரமான உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நான்கு அமெரிக்க அதிபர்கள்
- நோபல் பரிசு 2020: "ஹெபடைட்டிஸ் சி" வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
- இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று: அவசரநிலை அறிவிப்பு - விரிவான தகவல்கள்
- பிக் பாஸ் சீஸன் 4: பங்கேற்பவர்கள் யார், யார்? பின்னணி என்ன?
- உணவு சமைக்க கல் சட்டிகள்: உடல் நலத்துக்கு என்ன நன்மை?
- நோபல் பரிசு 2020: "ஹெபடைட்டிஸ் சி" வைரஸை கண்டறிந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :