You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கு பாகிஸ்தான் கண்டனம்
ஐந்து நூற்றாண்டுகளாக வரலாற்றுச் சிறப்புமிக்க பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கு மீண்டும் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ராமர் கோயில் கட்டுமானம் தொடர்பாகப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு இந்தியாவில் சிறுபான்மை மதத்தினரின் வழிபாட்டுத் தளங்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறது என்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
1992ஆம் ஆண்டு பாஜக மற்றும் அதன் தீவிர இந்துத்துவ கூட்டணிக் கட்சிகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த வலிமிகுந்த காட்சிகள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் மனதில் பழைமை மாறாமல் உள்ளது.
கொரோனா தொற்று பரவும் இந்த சூழலிலும் ராமர் கோயிலின் கட்டுமானம் தொடங்கப்பட்டது, முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, அச்சுறுத்தலான தேசிய குடிமக்கள் பதிவேடு, டெல்லியில் முஸ்லிம்களை இலக்கு வைத்து நடைபெற்ற தாக்குதல் மற்றும் பிற முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் எவ்வாறு, அச்சத்திலும், ஒடுக்கப்பட்டும், வன்முறைக்கும் ஆளாக்கப்பட்டு வாழ்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.
ஆர்எஸ்எஸ்-பாஜக சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் முஸ்லிம்களின் வழிப்பாட்டு தளங்களைத் தாக்கி வருகின்றன.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியப் பாரம்பரியமிக்க நினைவுச் சின்னங்களை `இந்துத்துவா` அமைப்புகளிடமிருந்து காப்பாற்ற சர்வதேச நாடுகள், ஐநா., மற்றும் தொடர்புடைய அனைத்து சர்வதேச அமைப்புகள் உதவிபுரிய வேண்டும்.
பிற செய்திகள்:
- அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை : “அனைத்தும் ராமருக்கு உரியது, ராமர் அனைவருக்கும் உரியவர்”
- ராமர் கோயில் விழா: ஸ்பெயினில் இந்தியர்கள் கொண்டாடினார்கள் என்பது உண்மையா?
- நேரு முதல் நரேந்திர மோதி வரை: மதச்சார்பின்மை முதல் பிரதமர்களின் மத ஊர்வலங்கள் வரை
- பா.ஜ.க தலைவரை சந்தித்த திமுக எம்எல்ஏ கு.க. செல்வத்தின் பதவிகள் பறிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: