கொரோனா வைரஸ் முடக்கத்திற்கு பிறகு மீண்டெழும் சீன பொருளாதாரம்

இரண்டாம் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 3.2% வளர்ச்சிப் பெற்றுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் முதல் மூன்று காலாண்டில் பெரும் சரிவை கண்ட உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் தற்போது வளர்ச்சியை சந்தித்துள்ளது.

புதன்கிழமையன்று வெளியான தகவல்கள்படி சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் - ஜூன் மாதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது தெரிகிறது.

சீனா தனது பொருளாதாரத்தை மீண்டெடுத்து கொண்டிருக்கும் வேளையில் உலக நாடுகள் அதை உற்று கவனித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த வளர்ச்சி கணிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமானதாகவே இருக்கிறது. மேலும் அதன் வளர்ச்சி ஒரு சரிவு, பின் வளர்ச்சி என்ற வடிவத்தில் உள்ளது.

மேலும் இதன் பொருள் சீனா தொழில்நுட்பத் துறையில் மந்த நிலைக்கு செல்லாமல் தவிர்க்கிறது என்பதாகும்.

இதுவரை இல்லாத அளவில் முதல் காலாண்டில் 6.8% அளவிற்கு வீழ்ச்சி கண்டது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி.

கொரோனா தொற்று பரவலை தடுக்க நாட்டின் பெரும்பாலான தொழிற்சாலைகளும், வர்த்தக நிலையங்கள் மூடியிருந்தன.

பொருளாதாரத்தை மீட்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

வளர்ச்சியடைகிறதா சீன பொருளாதாரம்?

பிபிசி செய்தியாளர் மரிகோ ஓய்யின் ஆய்வு

சீன பொருளாதாரம், நினைத்ததைக் காட்டிலும் விரைவாக சரிவிலிருந்து மீண்டுள்ளது.

அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்கின்றன. தொழிற்சாலைகளின் உற்பத்திகள் அதிகரித்துள்ளன.

ஆனால் நினைத்த அளவிற்கு மீண்டெழாத ஒரு துறையாக சில்லறை விற்பனை உள்ளது.

இரண்டாம் காலாண்டிலும் அதன் வளர்ச்சி விகிதம் சரிவிலேயே உள்ளது. மக்கள் மத்தியில் வாங்கும் திறனை அதிகரிப்பது சவாலான காரியமாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சி காணும் நிலையில், அமெரிக்காவுடனான பதற்றமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஹாங் காங் விஷயத்தில் இருநாட்டு உறவிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டிற்கான பொருளாதார இலக்கை நிர்ணயிக்கப்போவதில்லை என மே மாதத்தில் சீனா தெரிவித்திருந்தது.

1990ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிட தொடங்கியதற்கு பின் முதன் முதலாக இலக்கை நிர்ணயிக்கப்போவதில்லை என சீனா அறிவித்திருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: