You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை முறியடிக்க வித்தியாசமான முயற்சியைக் கையாண்ட டிக்டாக் பயனர்கள் மற்றும் பிற செய்திகள்
டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை முறியடிக்க வித்தியாச முயற்சியை கையாண்ட டிக்டாக் இளைஞர்கள்
அமெரிக்க அதிபர் தேர்தல் இவ்வாண்டு நடக்க இருக்கும் சூழலில் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். ஓக்லாஹாமாவில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை ஒருங்கிணைக்கப்பட்ட அவரது தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் கூட்டம் சேருவதைத் தடுக்க டிக்டாக் பயனர்கள் ஒரு வித்தியாச முயற்சியைக் கையாண்டுள்ளனர்.
அதாவது, அவருக்கான தேர்தல் பிரசார கூட்டத்திற்கு முன்பதிவு செய்துவிட்டு, செல்லாமல் இருப்பது என முடிவு செய்து அதற்கான பிரச்சாரத்தை டிக்டாக் பயனாளர்கள் முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாகத்தான் சனிக்கிழமை நடந்த பிரசாரத்தில் அதிகம் கூட்டம் சேரவில்லை என்கின்றனர்
அவர்கள். ஆனால், டிரம்ப் தரப்பு இதனை மறுக்கிறது.
இந்த எதிர்ப்பாளர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும். முன்பதிவின் போதே போலிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர் அவர்கள். தீயணைப்புத் துறையினர் 6000 பேர் இந்த கூட்டத்தில் பங்கேற்றதாகக் கூறுகிறது. ஆனால், அதிகம் பேர் கலந்து கொண்டதாகக் கூறுகிறது டிரம்ப் தரப்பு. 19,000 இருக்கைகள் அந்த வளாகத்தில் உள்ளது.
இந்த கூட்டத்திற்கு சென்ற பிபிசி செய்தியாளர் ஆண்டனி, இருக்கைகள் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையிலான அனுமதிச் சீட்டுகளை வழக்கமாக டிரம்ப் குழு வழங்கும். அதனால் எதிர்ப்பாளர்களின் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்கிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ்: புதிதாக 2,532 பேருக்கு தொற்று; 757 ஆக அதிகரித்த உயிரிழப்பு
தமிழகத்தில் புதிதாக 2,532 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட்-19 தொற்றால் மேலும் 53 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று இறந்த 53 நபர்களில், 37நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், 16நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.
விரிவாகப் படிக்க: தமிழகத்தில் மேலும் 2,532 பேருக்கு கொரோனா; ஒரே நாளில் 53 பேர் பலி
சூரிய கிரகணம்: உலக நாடுகளில் எப்படி தெரிந்தது?
மேற்கு ஆப்பிரிக்க நாடுகள், அரேபிய நாடுகள், தெற்காசிய நாடுகள், சீனாவின் தென்பகுதி மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிய கிரகணத்தின் அரிய காட்சி தென்பட்டது.
இந்த வளைவு சூரிய கிரகணத்தின் புகைப்படத்தை, இந்த நாடுகளில் உள்ள புகைப்படக்கலைஞர்கள் படமாக பதிவு செய்துள்ளனர்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடந்து செல்லும்போது, சரியாக சூரியனின் மையத்தை கடந்து சென்றதால் சூரியனின் வெளிப்புற பகுதி மட்டும் தெரிந்தது. அது நெருப்பு வளையம் போல காட்சியளித்தது.
விரிவாகப் படிக்க:
ரெம்டிசிவிர்: இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரிப்புக்கு அனுமதி
இந்தியாவில் கொரோனா நோய் எதிர்ப்பு மருந்தான ரெம்டிசிவிர் மருந்தை உற்பத்தி செய்ய சிப்லா மற்றும் ஹெட்ரோ ஆகிய இரண்டு முன்னணி மருந்து நிறுவனங்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மிக அவசர தேவைக்காக மட்டும் இந்த கொரோனா எதிர்ப்பு மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
விரிவாகப் படிக்க:சூரிய கிரகணம்: உலக நாடுகளில் எப்படி தெரிந்தது?
டெக்ஸாமெத்தாசோன்: கொரோனா மருந்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
`டெக்ஸாமெத்தாசோன் மாத்திரை கேட்டு என் கடையில் ஒரு போதும் இவ்வளவு பேர் காத்திருந்தது கிடையாது. அது பிரபலமான மருந்தாக உள்ளது. ஆனால் டாக்டரின் பரிந்துரை சீட்டு வைத்திருப்பவர்கள் அதை மொத்தமாக வாங்கிக் கொள்ள விரும்புகிறார்கள்'' என்று லக்னோவில் மருந்து கடை வைத்திருக்கும் ரோஹன் கபூர் கூறுகிறார்
``டெக்ஸாமெத்தாசோன் 0.5 மி.கி. மாத்திரைகள் ஏழு ரூபாய்க்கு கிடைக்கின்றன. தொலைதூரங்களில் உள்ள மருந்து கடைகளிலும் இது விற்கப்படுகிறது'' என்றார் அவர்.
``டாக்டரின் பரிந்துரையின் பேரில் அது வழங்கப்பட வேண்டும். எனவே செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து குறைந்தபட்சம் 100 வாடிக்கையாளர்களுக்கு டெக்ஸாமெத்தாசோன் தர மறுத்து அனுப்பிவிட்டேன்'' என்று டெல்லியின் புறநகரில் நொய்டாவில் உள்ள மருந்துகள் மொத்த விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.
விரிவாகப் படிக்க:டெக்ஸாமெத்தாசோன்: கொரோனா மருந்துக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: