மனிதர்களை கொல்லும் கொரோனா வைரஸ்: மரங்களை தாக்கும் நுண்ணுயிரியால் பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்

மரங்களையும் தாக்கும் நுண்ணுயிரி: பல லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்

ஆலிவ் மரங்களை அழிக்கும் ஒரு வகை நுண்ணுயிரியால் 20 பில்லியன் ஈரோக்கள் வரை நஷ்டம் வரலாம் என ஐரோப்பிய ஆய்வாளர்கள்மதிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸால் உலகெங்கும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர் என்றால், ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்பெயின் மற்றும் கிரீஸில் ஆலிவ் மரங்களை ஒரு வகை பாக்டீரியா தாக்கி உள்ளது.

பூச்சியிலிருந்து பரவிய இந்தபாக்டீரியாவால் ஆலிவ் மரங்கள் மட்டும் அல்ல, செர்ரி மற்றும் ப்ளம்ஸ் மரங்களும் பாதிக்கப்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ்: சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறாரா மலேசிய பிரதமர்?

ஏப்ரல் 14 செவ்வாய்க்கிழமை இந்திய / இலங்கை நேரப்படி மாலை நேரப்படி சுமார் 5 மணி அளவில் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,987 ஆக உள்ளது. இவர்களில் கிட்டத்தட்ட சரிபாதி பேர் அதாவது 2,478 பேர் வைரஸ் தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1200-ஐ கடந்தது

தமிழ்நாட்டில் இன்று 31 பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. 81 நோயாளிகள் இதுவரை குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறித்த தகவல்களை அளிக்கும் தினசரி செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், "தற்போது தமிழ்நாட்டில் 28,711 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள அரசுக் கண்காணிப்பில் 135 பேர் உள்ளனர். இதுவரை 68,519 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பை நிறைவுசெய்துள்ளனர்," என்று கூறினார்.

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த வெளிமாநில தொழிலாளர்கள்

இன்று ஊரடங்கு முடிந்து ரயில்கள் மீண்டும் இயங்கும் என நம்பி மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் கூடியது. பல்லாயிரம் பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள்.

ஆனந்த் டெல்டும்டே சரணடைந்தார் - அவர் கைது ஏன் இவ்வளவு பரபரப்பானது?

பீமா கொரேகான் வழக்கில் சமூக செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே மும்பையில் இன்று, செவ்வாய்க்கிழமை, சரணடைந்ததைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அவரை கைது செய்துள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: