You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“அமெரிக்கர்களுக்கு அனுமதி இல்லை” - எல்லையை மூடிய மெக்ஸிகோ மக்கள் மற்றும் பிற செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்படாத அமெரிக்கர்கள் மூலம் தங்களுக்கு அந்த தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக அமெரிக்காவுடனான எல்லையை மெக்ஸிகோ போராட்டக்காரர்கள் மூடியுள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள மெக்ஸிகோ உடனான எல்லைப்பகுதியில் இந்த சம்பவம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
முகக்கவசங்களை அணிந்திருந்த போராட்டக்காரர்கள், “அமெரிக்கர்கள் வீடுகளிலேயே இருங்கள்” என்று குறிப்பிடும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
மெக்ஸிகோவில் இதுவரை 475 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவிலோ உலகிலேயே அதிகபட்சமாக 83,836 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு சுட்டிக்காட்டுகிறது.
இரு நாடுகளுக்கிடையேயான எல்லையில் இன்றியமையாத சேவைகளை தவிர்த்த ஏனைய போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இருந்து வருபவர்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனைகள் சரிவர செய்யப்படவில்லை என்று மெக்ஸிகோ போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
தமிழ்நாட்டில் தற்போதுவரை 30 பேர் கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு தமிழகத்தின் அரசு மருத்துவர்கள் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள்?
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்தவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனாவுக்கென சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?
கொரோனா வைரஸ்: இந்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 இரவு 12 மணி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய பொருளாதார சலுகைகளை அறிவித்தார்.
நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை சரியான திசையை நோக்கிய முதல் அடி என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.
விரிவாக படிக்க:கொரோனா வைரஸ்: இந்திய அரசு ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - பொருளாதார சலுகைகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா? உண்மை என்ன?
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் பரவல் எவ்வாறு வலுப்பெற்றது, இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி எதுவும் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வைரஸ் தொடர்பான அதிகபட்ச அளவிலான தகவல்களை சேகரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் பல தகவல்கள் பரவி வருகின்றன. இவற்றில் சில போலியானவை அல்லது உறுதிப்படுத்தப்படாதவை.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுகிறதா? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: