You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருக்கலைப்பு இனி குற்றமல்ல: நியூசிலாந்தில் மசோதா நிறைவேற்றம் மற்றும் பிற செய்திகள்
கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் பெண்ணொருவர் தனது கருவை கலைப்பதற்கான உரிமையை வழங்கும் மசோதா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் குற்றவியல் சட்டத்தின்படி, குற்றமாக கருதப்பட்டு வரும் கருக்கலைப்பை அதிலிருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பு நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் 68க்கு 51 என்ற கணக்கில் கருக்கலைப்பை குற்றமற்றதாக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு முன்புவரை, கர்ப்பம் தரித்த பெண்ணொருவரின் உடல் நலனுக்கு "மிகவும் அபாயகரமான பிரச்சனை" இருந்தால், இருவேறு மருத்துவர்களின் ஒப்புதலுக்கு பிறகே நியூசிலாந்தில் கருக்கலைப்பு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வந்தது.
நியூசிலாந்தில் குற்றமாகக் கருதப்படும் ஒரே மருத்துவ முறையாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக கருக்கலைப்பு விளங்கி வந்தது. இந்நிலையில் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், நியூசிலாந்து பெண்கள் எவ்வித இடையூறும் இல்லாமல், தக்க நேரத்தில் முடிவெடுக்க முடியுமென்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தின் வரலாறும், அதன் எதிர்காலமும்
மதுரையில் பிரசித்தி பெற்ற தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய அரங்கத்தைக் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த பழைய கட்டுமானங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்த மைதானம் முன்பிருந்ததைப் போல உபயோகத்தில் இருக்குமா என்ற கவலையால் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தமுக்கம் மைதானத்தில் உண்மையில் என்ன கட்டப் போகிறார்கள்?
தமிழகத்தில் 2-வது கொரோனா தொற்று கண்டுபிடிப்பு
டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்த 20 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு அவர் தமிழகம் வந்தபோது அவருக்கு அறிகுறி இல்லை என்றும் ஆனால், தற்போது அறிகுறி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய அமைச்சர், தற்போது அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்தவர்கள் கொரோனா சோதனை செய்யாமல் ஊருக்கு சென்றது உறுதி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், புத்தளம் மாவட்டத்திற்கும், கொச்சிக்கடை போலீஸ் பிரிவிற்கும் போலீஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போலீஸ் ஊரடங்கு சட்டம் நேற்று மாலை 4.30 மணி முதல் மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை அமலில் இருக்கும் என பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க:இத்தாலி, இரான், கொரியாவில் இருந்து இலங்கை வந்தோர் பரிசோதனை இன்றி ஊருக்கு சென்றது உறுதி
இந்தியாவில் 1918-இல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ
வாழ்வின் மீதிருந்த ஆர்வம் போய்விட்டதாக ஒருமுறை மகாத்மா காந்தி குஜராத் ஆசிரமத்தில் இருந்தபோது அவர் நெருங்கிய நண்பரிடம் கூறினார். 1918ல் ஸ்பானிஷ் ஃப்ளூவால் பாதிக்கப்பட்டபோது அவர் கூறிய வார்த்தைகள் இவை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: