You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? - விளக்கும் வரைபடங்கள்
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த கொரோனா தொற்றுக்கு முதலில் சீனாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிற நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.
இத்தாலி, இரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று எந்தளவு பரவி வருகிறது என்பதை வரைப்படங்கள் மூலம் இங்கே உங்களுக்கு விளக்குகிறோம்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
- சீனா - 80,980 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 3,136 பேர் உயிரிழப்பு
- இத்தாலி - 12, 262 பேருக்கு பாதிப்பு, 827 பேர் உயிரிழப்பு
- இரான் - 9000 பேருக்கு பாதிப்பு, 354 பேர் உயிரிழப்பு
- தென் கொரியா - 7869 பேருக்கு பாதிப்பு, 66 பேர் உயிரிழப்பு
- பிரான்ஸ் - 2269 பேருக்கு பாதிப்பு, 48 பேர் உயிரிழப்பு
- ஸ்பெயின் - 2140 பேருக்கு பாதிப்பு, 49 பேர் உயிரிழப்பு
சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்று அதிகரிகரித்து வருகிறது
சீனாவில் ஹூபே மாகணத்தில், வுவான் நகரில் இந்த தொற்று பரவத் தொடங்கிய சமயத்திலிருந்து தற்போது வரை சுமார் 80,908 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு வெளியே சுமார் 30,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி வரை சீனாவைக்காட்டிலும் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு இத்தாலியாக உள்ளது. இத்தாலியில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் 5000 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா ஒரு உலகளாவிய தொற்று எனவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத்தாலியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீதிகள் ஆள் நடமாற்றமின்றி காணப்படுகிறது.
இரானில் இதுவரை சுமார் 8000 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டெஹ்ரானில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரானில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முக்கிய கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்காலிகமாக 70,000 சிறை கைதிகளை அதிகாரிகள் விடுதலை செய்கின்றனர்.
சர்வதேச அளவில் பிரபலமாகும் கொரோனா நடனம்
கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எப்படி? Corona Hand Wash
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா? - விரிவான அலசல்
- கொரோனா வைரஸ்: ஐரோப்பாவுடன் விமான சேவையை துண்டித்த அமெரிக்கா, விசா வழங்குவதை நிறுத்திய இந்தியா
- ஒரு லட்சம் வாத்துகள், 1000 கோடி ரூபாய் பணம்: வெட்டுக்கிளி பிரச்சனை, திணறும் தேசங்கள்
- கொரோனா: மும்பையில் இருவர் பாதிப்பு, 73 ஆக உயர்ந்த எண்ணிக்கை - இந்தியாவில் நிலை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: