எரிந்து சாம்பலான 50 ஆயிரம் வாக்கு இயந்திரங்கள் - எங்கே, எப்படி? மற்றும் பிற செய்திகள்

எரிந்து சாம்பலான 50ஆயிரம் வாக்கு இயந்திரங்கள் - எங்கே, எப்படி?

வெனிசுவேலா நாட்டில் ஏறத்தாழ 50 ஆயிரம் வாக்கு இயந்திரங்கள் எரிந்து சாம்பலானதாக அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெனிசுவேலா தலைநகரான கராகஸ் அருகே உள்ள கிடங்கில் பற்றிய தீ விபத்தினால் வாக்கு இயந்திரங்களுடன் சேர்ந்து தேர்தலுக்காகப் பயன்படுத்த வைத்திருந்த 582 கணினிகளும் தீக்கிரையானதாக அந்நாட்டுத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிப் போகுமா என்பதனை அவர் தெரிவிக்கவில்லை. வாக்கு இயந்திரங்களும், கணினிகளும் 65,000 சதுர அடி கிடங்கு ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை அங்கு பெரும் தீ ஏற்பட்டது. ஆனால், தீ விபத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

கொரோனா வைரஸ்: இத்தாலி முதல் இந்தியா வரை பாதிப்புகள் என்ன? - விரிவான தகவல்கள்

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தடைகளுக்கு எதிராக அந்நாட்டில் சிறைச்சாலை ஒன்றில் நடந்த கலவரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள மொடேனா நகரில் உள்ள சிறைச்சாலையில் ஒரு பிளாக்குக்கு அங்குள்ள கைதிகள் தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா குறித்த வதந்திகள், கதைகள் எந்த அளவுக்கு உண்மை? - டாக்டர் குழந்தைசாமி விளக்கம்

உலகம் முழுவதும் 80 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் தாக்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பொது சுகாதாரத் துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், இந்த வைரஸ் குறித்த வதந்திகள் குறித்தும் தமிழக பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி பிபிசியிடம் விரிவாகப் பேசினார்.

மலேசியா அமைச்சரவையில் துணை பிரதமர் நியமனம் இல்லை

மலேசியாவின் எட்டாவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மொகிதின் யாசின் இன்று திங்கட்கிழமை தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களை அறிவித்துள்ளார். இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சரவணன் முழு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். எட்மண்ட் சந்தாரா துணையமைச்சராகி உள்ளார்.

உடலுறவில் உச்சநிலை: தந்த்ரா முறை குறித்து பயிற்சியளிக்கும் சிங்கப்பூர் பெண்

செக்ஸ் இங்கு பலருக்கு தடைசெய்யப்பட்ட வார்த்தை. ஆசியாவில் சொல்லவே வேண்டாம். செக்ஸ் என்ற வார்த்தையே இங்கு தீட்டு. இங்கு ஒரு பெண் தந்த்ரா குறித்து பயிற்சி தருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: