You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மரியா ஷரபோவா: 32 வயதில் ஓய்வுபெற்ற டென்னிஸ் பேரழகி மற்றும் பிற செய்திகள்
5 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.
32 வயதான இந்த ரஷ்ய வீராங்கனை, வாக் அண்ட் வேனிட்டி ஃபேர் இதழுக்காக எழுதியுள்ள கட்டுரையில், தனது உடல் காயங்கள் தனக்கு பெரும் கவனச் சிதறலை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக அவர் தோள்பட்டை காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் பல போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.
தனது 17 வயதில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர், நான்கு முக்கிய கிராண்ட்ஸ்லாம்களையும் வென்றுள்ளார்.
திறமையான ஆட்டம், அசத்த வைக்கும் சர்வ்கள், உடல் தகுதி தொடர்பான பிரச்சனைகள், சில சர்ச்சைகள் போன்ற பல காரணங்களால் தலைப்பு செய்திகளில் அடிக்கடி இடம்பெற்றுவந்த மரியா ஷரபோவா, அவரது அழகுக்காகவும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டென்னிஸ் பேரழகி என்றும் இவர் புகழப்பட்டார்.
கீழடி 6ம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் சில முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடியை ஒட்டியுள்ள கொந்தகை பகுதியில் நடந்துவரும் இந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஒடுகளும் கிடைத்துள்ளன.
மதுரைக்கு அருகில் உள்ள தொல்லியல் பகுதியான கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. இந்த நிலையில், கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவையும் கிடைத்து வருகின்றன.
விரிவாக படிக்க: கீழடி 6ம் கட்ட அகழாய்வு: முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
மாநிலங்களவைத் தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு ஓர் இடம் கிடைக்குமா?
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதத்தோடு ஆறு மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் வரும் நிலையில், அந்த இடங்களைப் பெறுவதற்கான போட்டிகள் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் ஓரிடத்தை எதிர்பார்க்கிறது தே.மு.தி.க.
தமிழ்நாட்டில் காலியாகும் ஆறு இடங்களில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா மூன்று இடங்கள் கிடைக்கும். இதனால், மாநிலங்களவையில் அ.தி.மு.கவின் பலம் பதினொன்றிலிருந்து பத்தாகக் குறையும். தி.மு.கவின் பலம் ஐந்திலிருந்து ஏழாக உயரும்.
விரிவாக படிக்க: மாநிலங்களவைத் தேர்தல்: தே.மு.தி.க.வுக்கு ஓர் இடம் கிடைக்குமா?
செளதி அரேபியாவின் அழுத்தத்தாலேயே அபிநந்தனை விடுதலை செய்ததா பாகிஸ்தான்?
2019 பிப்ரவரி 28, அன்று, செளதி அரேபிய தொலைபேசி எண்ணில் இருந்து அபிநந்தனின் மனைவி தன்வி மர்வாவின் மொபைலில் அழைப்பு வந்தபோது, வருத்தத்தில் இருந்த அவருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. மறுமுனையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து. தன்வியின் கணவர் விங் காமாண்டர் அபிநந்தன் பேசிக் கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. முயற்சியில் இந்த அழைப்பு செளதி அரேபியா வழியாக வந்தது. ஒருபுறம், ஐ.எஸ்.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள், அபிநந்தன் முகத்திலும் உடலிலும் காயம் ஏற்படுத்தியிருந்தார்கள். மறுபுறம், ஒருவர் அபிநந்தனின் மனைவியுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளரா?
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களுக்கு எதிராக டெல்லியின் வடகிழக்கு பகுதியில் திங்கள்கிழமை முதல் வன்முறை மோதல்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறையில் இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். 48 போலீஸ்காரர்களும் சுமார் 90 பொது மக்களும் காயமடைந்துள்ளனர். ஆனால் இவை அனைத்திற்கும் இடையில், திங்களன்று வெளிவந்த ஒரு வீடியோ மிகவும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :