You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா பலி 132 ஆக உயர்வு: "பிசாசை வீழ்த்துவோம்" - சீன அதிபர் ஷி ஜின்பிங் சூளுரை
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 132 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா வைரஸை பிசாசு என வர்ணித்துள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், "அந்த பிசாசை வீழ்த்துவோம்" என சூளுரைத்துள்ளார்.
சரி... கொரோனா வைரஸ் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை என்னென்ன. இதோ பார்ப்போம்...
இந்நிலையில், சீன நாட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல விமான சேவை நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிஃபிக் விமான நிறுவனங்கள் சீனாவிற்கான விமான சேவைகளை குறைத்துள்ளன. அதே நேரத்தில் லயன் ஏர் நிறுவனம், சீனாவிற்கு விமான சேவையை மொத்தமாக நிறுத்தியுள்ளது.
பலி, தனிமை, நம்பிக்கை - டிராகன் தேசத்தில் நடப்பவை
- கொரோனா வைரஸால் சீனாவில் இதுவரை 132 பேர் பலியாகி உள்ளனர் என சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சீனாவில் உள்ள தமது 2000 கிளைகளை மூடியுள்ளது.
- சீனா சென்று வந்த ஏறத்தாழ 600 பேரை கிறிஸ்துமஸ் தீவில் இரண்டு வாரத்திற்குத் தனிமைப்படுத்தி வைத்துள்ளது ஆஸ்திரேலியா. இந்த தீவானது ஆஸ்திரேலியாவிலிருந்து 1200 மைல் தொலைவில் உள்ளது.
- சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் இருந்து 200 ஜப்பானியர்கள் நாடு திரும்பி உள்ளனர். இன்னும் 650 பேர் நாடு திரும்ப விருப்பம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தை அந்நாடு ஏற்பாடு செய்துள்ளது.
- வந்தவர்களில் பலருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனை உள்ளதாகத் தெரிவித்துள்ள ஜப்பான் அரசாங்கம், சீனா சென்று திரும்பிய அனைவரும் பரிசோதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
- வுஹான் பகுதியில் உள்ள 200 பிரிட்டானியர்களை அழைத்துவர பிரிட்டன் ஏற்பாடு செய்துள்ளது.
- அதுபோல 700 தென் கொரியர்களை அங்கிருந்து அழைத்து வர நான்கு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது அந்த நாடு.
- சீனா செல்ல தடை விதிக்க ஹாங்காங் திட்டமிட்டு வருகிறது.
- இந்த வைரஸ் தொற்று உச்சத்தை தொட இன்னும் 10 நாட்கள் ஆகும் என்கிறது சீன சுகாதாரத் துறை.
- சீனாவிலிருந்து 200 அமெரிக்கர்கள் நாடு திரும்பி உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: