போப் பிரான்சிஸ் சொன்ன அறிவுரை: "இந்த பிழையை இனி தொடராதீர்கள்" மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
"இந்த பிழையை இனி தொடராதீர்கள்"
உங்கள் தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டு குடும்பத்துடன் அமர்ந்து உரையாடுங்கள் என ஏசு கிறிஸ்து, மேரி, ஜோஷஃப் ஆகியோரை மேற்கோள் காட்டி போப் பிரான்சிஸ் அறிவுரை வழங்கி உள்ளார். அவர்கள் உரையாடினார்கள், உழைத்தார்கள் வழிப்பட்டார்கள் என கூறி உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நாம் குறைந்தபட்சம் உணவு மேஜையில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் போதாவது கைபேசிகளில் மூழ்காமல் குடும்பத்துடன் உரையாட வேண்டும் என்று கூறி உள்ளார். சமூக ஊடகங்களில் அதிகம் ஆர்வம் கொண்டவர் போப் பிரான்சிஸ். பக்தர்களுடன் பலமுறை பிரான்சிஸ் செல்ஃபி எடுத்திருக்கிறார்.

சீனா - இந்தியா: ஜியோமியின் அசுர வளர்ச்சிக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
2010இல் வெறும் 100 பணியாளர்களுடன், பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜியோமி நிறுவனம் இன்று 17,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் உலகம் முழுவதும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்கி பெருகியுள்ளது.இந்த தசாப்தத்தில் தொழில்நுட்ப உலகில் புதிதாக உதயமாகி, மலைக்க வைக்கும் வளர்ச்சியை அடைந்துள்ள ஜியோமி நிறுவனத்தின் வெற்றிக்கதை இது.
விரிவாகப் படிக்க:சீனா - இந்தியா: ஜியோமியின் அசுர வளர்ச்சிக்கு காரணம் என்ன?

வேலைவாய்ப்புக்காக திருப்பூர் வரும் காஷ்மீர் பெண்கள் - நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images
2019ன் கடைசி மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசினார் பிரதமர் நரேந்திர மோதி. திருவள்ளுவர், திருப்பூர் வரும் காஷ்மீர் பெண்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் பேசினார். "2019-ஆம் ஆண்டு இன்னும் 3 நாட்களில் கடந்துவிடும். 2020-ஐ நாம் புது ஆண்டாக மட்டும் வரவேற்கவில்லை, மற்றொரு தசாப்தத்தின் தொடக்கமாகவும் வரவேற்கிறோம். 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்கு வகிப்பவர்கள் 21ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்களாகவே இருப்பார்கள்" என்று கூறினார்.
விரிவாகப் படிக்க: வேலைவாய்ப்புக்காக திருப்பூர் வரும் காஷ்மீர் பெண்கள் - நரேந்திர மோதி

ஜார்கண்ட் முதல்வரானார் ஹேமந்த் சோரன் - பதவியேற்பு விழா

பட மூலாதாரம், Getty Images
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று ஞாயிற்றுகிழமை அம்மாநிலத்தின் முதலமைச்சராக பணியேற்றார். இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் 11வது முதலமைச்சர் ஆவார்.ஜார்கண்ட் மாநில ஆளுநர் திரௌபதி முர்மூ, ஹேமந்த் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
விரிவாகப் படிக்க: ஜார்கண்ட் முதல்வரானார் ஹேமந்த்- பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மு. க. ஸ்டாலின்

இறக்குமதி பொம்மைகளால் குழந்தைகளுக்கு புற்றுநோயா?

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் வசிக்கும் ஷீபாவைப் போலவே, பல பெற்றோர்களும் பொம்மைகளால் குழந்தைகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்று நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பதோடு பொம்மைகளின் தரம் மட்டுமே முக்கியம் என்று நினைத்து பொம்மைகளை வாங்குகிறார்கள். வேறு எதையும் சரிபார்க்க அவர்களுக்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை.
ஆனால், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில் 66.90 சதவீதம் குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்று இந்திய தர கவுன்சில் அறிக்கை கூறுகிறது.
விரிவாகப் படிக்க: இறக்குமதி பொம்மைகளால் குழந்தைகளுக்கு புற்றுநோயா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












