'டிக்டாக்' அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா - விசாரனை நடப்பது ஏன்?

டிக்டாக் (TikTok) செயலியின் உரிமையைக் கொண்டுள்ள சீன நிறுவனம், மியூசிகலி (Musical.ly) செயலியை வாங்கிய ஒப்பந்தம் அமெரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான காரணங்களுக்கான மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

சீன நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) 2017ல் மியூசிகலியை ஒரு பில்லியன் டாலருக்கு வாங்கியது.

நிறுவனங்களை கையகப்படுத்துதலை முறைப்படுத்தும் அமெரிக்க அரசின் அமைப்பால், இந்த ஒப்பந்தத்துக்கு அந்த சமயத்தில் ஒப்புதல் தரப்படவில்லை என்பதால் இந்த மறு ஆய்வு நடக்கிறது என ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது. அந்த தகவலை வெளியிட்டவர் குறித்த விவரங்களை ராய்ட்டர்ஸ் வெளியிடவில்லை.

சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது அமெரிக்காவுக்கு சந்தேகம் அதிகரித்துவரும் சூழலில் இந்த விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அந்நிய முதலீட்டுக்கான குழு மியூசிகலி ஒப்பந்தத்தை குறித்து ஆராய்ந்து வருகிறது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது

அந்நிய முதலீட்டுக்கான குழு பைட்டான்ஸ் நிறுவனம் மியூசிகலி செயலியை வாங்கிய சமயத்தில் சரியாக கவனிக்காத்தால், இப்போது அந்த ஒப்பந்தம் குறித்து விசாரித்து வருகிறது. அமெரிக்கா நிறுவனம் இல்லாத பிற நிறுவனங்களின் கையகப்படுத்துதலை இந்த குழு ஆய்வு செய்யும்.

மியூசிகலி செயலியை வாங்கியபோது பைட்டான்ஸ்தன்வசம் கையகப்படுத்திய சொத்துகள் குறித்து இந்த குழு கவலையில் இருப்பதாக ராய்ட்டர்ஸ் கூறியுள்ளது. மியூசிகலி செயலியை வாங்கியபோது ஒரு மாதத்திற்கு 60 மில்லியன் பயனாளரை மியூசிகலி கொண்டிருந்தது.

ராய்ட்டர்ஸின் இந்த செய்திக்கு பைட்டான்ஸிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அமெரிக்க அரசியல் செய்திகள் குறித்து தவறாக டிக்டாக்கில் வெளியாவதாக கூறுப்படுவதாலும், டிக்டாக் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை கையாளும் விதத்தையும் கண்காணிப்பதற்காவும் அரசியல்வாதிகளிடம் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களால் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஆனால், தங்கள் செயலியில் வெளியாகும் உள்ளடக்கங்களில் சீன அரசின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது டிக்டாக் நிறுவனம். மேலும் சீன அரசின் வற்புறுத்தலால் எந்த ஒரு காணொளியும் தங்கள் செயலியில் இருந்து நீக்கப்படவில்லை எனக் கூறியுள்ளது.

அமெரிக்க டிக்டாக் பயனாளர்களில் 60 சதவீதம் இளைஞர்களே உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் 16-24 வயதினர்.

தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் அமெரிக்க அரசின் வரைமுறைப்படுத்தும் அமைப்புகள் ஆகியோரின் நம்பிக்கையை பெறுவதே தங்களுக்கு முக்கியம் என டிக்டாக் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :