You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் - துயரத்தில் முடிந்த அன்பின் கதை
ஓர் அமெரிக்க இளைஞர் தான்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கிப் பலியானார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் தன் தோழி கெனிஷாவுடன் தான்சானியா பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கி இருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்பதைக் கவித்துவமாகக் கேட்க விரும்பிய அவர் தண்ணீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்துள்ளார்.
தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் தண்ணீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்துள்ளார்.
அந்த சமயத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.
தன் வாழ்வில் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாக கெனிஷா ஃபேஸ்புக் பதிவொன்றில் கூறி உள்ளார்.
அவர்கள் தங்கி இருந்த மாண்டா விடுதி நிர்வாகம், "நாங்கள் கவலையின் விளிம்பிற்கே சென்றுவிட்டோம்" என்று கூறி உள்ளது.
நான்கு இரவுகளுக்கு அந்த விடுதியை வெபர் முன்பதிவு செய்திருக்கிறார். மூன்றாவது இரவு இந்த விபத்து நடந்துள்ளது.
ஓர் இரவுக்கான கட்டணம் 1700 அமெரிக்க டாலர்கள்.
இந்த விடுதியானது தண்ணீருக்கடியில் 32 அடி ஆழத்தில் உள்ளது.
பாக்யராஜ் சொன்ன அந்த ஒரு வார்த்தை: ஒத்த செருப்பு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்